காதல் ரயில்

சேர்ந்தே பயணித்த போதும்
உன்னை ஒரு கதவின் வழியாகவும்
என்னை ஒரு கதவின் வழியாகவும்
இறக்கிவிட்டுச் செல்கிறது
காதல் ரயில்
*
ரயில் போனபின்னும்
இணைந்தே இருக்கின்ற
தண்டவாளங்கள் போலவே
இணைந்தே வருகின்றது
பயணத்தின் ஞாபகங்கள்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (12-Aug-20, 2:15 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : kaadhal rail
பார்வை : 69

மேலே