தேயிலைத் தாய்

தேயிலைக் கூடையைத் தூக்கியே கூனிய தேவதையே
பாயிலே நான்விழப் பார்க்கிற வேலையும் பாதியிலே
போயிடு மென்கிற போதிலு மேயதைப் போட்டுதறி
தாயுனைப் போலெனைத் தாங்கிய வேறொரு தாயிலையே

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (12-Aug-20, 2:04 am)
பார்வை : 44

மேலே