வேண்டாமே காதல் பள்ளிப்பருவத்தில்

வேண்டாமே!
காதல் பள்ளிப்பருவத்தில்

உங்கள்  லட்சியம் அழித்துவிடும்
பெற்றோரை நிச்சயம் அழவைத்துவிடும்

வேண்டாமே!
காதல் பள்ளிப்பருவத்தில்

கொள்கைகள் எல்லாம் கொன்றுவிடும்
உங்களைக் கூனிகுறுக வைத்துவிடும்

வேண்டாமே!
காதல் பள்ளிப்பருவத்தில்

பெற்றோரின் தியாகங்கள் தான் உங்கள் வாழ்க்கை
கல்வியினால் மாற்றிவிடு அதன் போக்கை

வேண்டாமே!
காதல் பள்ளிப்பருவத்தில்

உங்கள் எதிர்காலத்தை
சூன்யமாக்கிவிடும்
பெற்றோரின் வாழ்வை நடைபிணமாக்கிவிடும்

வேண்டாமே!
காதல் பள்ளிப்பருவத்தில்

இனக்கவர்ச்சி எல்லாம் இதிகாச காதல் அல்ல
காதலுக்கு காதல் சொல்ல போதிய வயதுமில்ல

பாசமிகு ஒருதாய் பிள்ளைப் போல்
பள்ளிதனில் படித்திடுங்கள்
பட்டம் பல பெற்று
பாரினில் புகழ் படைத்திடுங்கள்

காதலே! காதல் கொள்ளும்
காலம் கனியும் வரை காத்திருங்கள்

என் ஆருயிர் செல்வங்களே!

அன்பே! காதல் என்பதை அறிந்திடுவீர்
அகக்கண்ணைத் திறந்திடுவீர்!

சரவிபி ரோசிசந்திரா

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (11-Aug-20, 11:09 pm)
பார்வை : 75

மேலே