காதல் திருமணம்

சொல்ல வா சொல்ல வா
நம் காதல் கதையை சொல்ல வா
உணர்வில் உறைந்ததை சொல்ல வா

மனவறையில் நான் வசித்த நேரம்
கருவறை வாசம் வீசியதே
உன் மார்பில் சாய்ந்து உறங்கிய காலம்
மனதில் தாய்மை சுரந்ததே

கால தாமதமாக வந்தாலும்
காதல் கசக்கவில்லை
கரம் பிடித்த நாளில் இருந்து
கண்ணீர் சிந்தவில்லை

சொல்ல வா சொல்ல வா
நீ என் உயிர் அல்லவா
நான் உன் உயிர் அல்லவா

கைகோர்த்து நடந்திட சாலைகள் விரிவாகுதே
கைபேசியும்  காதலில் ஏனோ மௌனமாகுதே

உன்னுடன் கடந்த பாதைகள் எல்லாம்
வாடைக் காற்று  வீசியது
நீயின்றி நானும் கடந்து சென்றால் கோடையாகி நினைவை சுடுகிறது

சொல்ல வா சொல்ல வா
நம் காதல் கதையை சொல்ல வா
உணர்வில் உறைந்ததை சொல்ல வா

ஈருயிர் ஓருயிராகிட
இறைவன் கொடுத்த திருநாள்
மணவறையில்  நாம் மகிழ்ந்திட அனைவரும் வாழ்த்தும் மணநாள்

இரவெல்லாம் கதைக்க ஏனோ  வீட்டுச்சூழல் இல்லை
பரிதி உதிக்கும் நேரத்தை
மாற்றியமைக்க வழியுமில்லை
பார்வைகள் பார்த்து பேசிட
பணிச்சூழலும் நமக்கில்லை
பார்த்து பசியாறிட
பாசத்திற்கு பஞ்சமில்லை

சொல்ல வா சொல்ல வா
நீ என் உயிர் அல்லவா
நான் உன் உயிர் அல்லவா

சேர்ந்து வாழும் வாழ்க்கை என்றும் சொர்க்கமே
சேர்ந்தே இருப்போம் நாமும்
இதிலென்ன வெட்கமே
மகிழ்ச்சி வாழ்வில் நிலைத்திருக்க  தேவையில்லை பணமே
மனமேனும் கோவிலில் வசிக்கிறது
அன்பெனும் குணமே

சொல்ல வா சொல்ல வா
நம் காதல் கதையை சொல்ல வா
உணர்வில் உறைந்ததை சொல்ல வா

சரவிபி ரோசிசந்திரா

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (11-Aug-20, 10:07 pm)
Tanglish : kaadhal thirumanam
பார்வை : 118

மேலே