என் உயிரே
ஏனேனோ உன் வாசம்
என் சுவாசம் ஆனதே
ஏதேதோ உன் ஏக்கம்
உயிர் கூட்டில் வழியுதே
உன் பார்வை என்னும் தீ பொறி
என் தாகம் கொல்லும் நீர் துளி
தினம் தாகம் கூடுதே
நீ வந்து போகும் பல வழி
நான் தங்கி செல்லும் முகவரி
என் விலாசம் நீளுதே
நீயாக நானும்
நானாக நீயும்
உடற்கூடு மாறும்
வரம் ஒன்று போதும்
இறந்தாலும் கூட
உன் அணைப்புதான்
வேண்டும்
அணைத்தாலும் அணையாத
தீ இங்கே மூளும்
நீ இன்றி வாழும்
நாளெல்லாம் சாபம்
நீ இன்றி போனால்
வெறும் கூடாகும் தேகம்
வா உயிரே
இரண்டற நீயும் கலப்பாய்
உன் விழியில்
கூடுகட்டி எனை அதில் நுழைப்பாய்