இதழோரம் இதமாக

வண்டுகளும் குளவிகளும்
தேனீக்களும் தும்பிகளும்
ஒன்று கூடி ஓரிசைவாய்
தேடலொன்றை நிகழத்துது
மண்ணுலகில் எவ்வுயரும்
அறிந்திடாத மதுரசத்தை
கண்டுவிட வேண்டுமென்ற
அற்பாசையில் திளைக்குது
அம்மதுர அமுதை
மழையாய் சொரியும்
செவ்வதரங் கொண்ட
அணங்கை அறிவேன்
மருந்துக்கு கேட்ப்பினும்
மறந்தும் உரையேன்
புதையலை காக்கும்
புளங்காகித கருமி நான்!