எங்கெங்கு காணினும்

கண்ணுக்குள் பாவையென
கலந்த கண்ணாவே
கார்முகிலின் வானமென
கவிமழைப் பொழிந்தோமே
உடலுக்குள் உயிராகி
உள்ளுணர்வில் உறைந்தோமே
தொலைதூர பயணத்தில்
அன்பு தொலைந்திடுமோ
பேதைமனம் துடிக்கிறது
பிரிவை எண்ணி தவிக்கிறது
நித்திரை மறந்தாலும்
நித்தம் உன்
நினைவு விழித்திருக்கும்
மறவாதே ஆருயிரே
நினைவுக்குள் நானில்லை எனில்
என்னுடலுக்குள் உயிரில்லை
பாவை கண் தூங்காது
பால்முகத்தைப் பார்க்கும்வரை
சீக்கிரம்  விரைந்துவிடு
பயணம் முடிந்த உடன்



சரவிபி ரோசிசந்திரா

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (13-Aug-20, 1:00 pm)
Tanglish : engengu kaninum
பார்வை : 179

மேலே