என்னவனின் காதல் அன்றும் இன்றும்

உன்னிடம் பேச என் தூக்கத்தை மகிழ்ச்சியாய் தொலைத்தேன் அன்று
உன் மௌனத்தால் என் தூக்கத்தையே
தொலைத்தேன் இன்று
கனவுகளில் மிதந்த நாட்களோ அன்று
கண்ணிரால் மிதக்கும் நாட்களோ இன்று
பூரிப்பால் படப்படுத்தது என் இதயம் அன்று
புலம்பல்கலாள் பதறுகிறது இன்று
வண்ணத்துப்பூச்சியாய் பறந்தது என் சிந்தனை அன்று
துவண்டு விழுந்த பூவாய் போனதே என் சிந்தனை இன்று
வலிகளும் சந்தோஷமாய் உணர்ந்தது அன்று
சந்தோஷமும் வலிகளாய் உணர்கிறேன் இன்று
குளிர் காற்றால் விரல்கள் இணைந்தது அன்று
அனல் காற்றிலும் உன் விரல்களை தேடுகிறேன் இன்று
என் கண்கள் தேடிய சிற்பம் நீ
அதற்கு உயிர் கொடுத்து மீட்டெடுத்தேன் அன்று
உயிர் கொடுத்து மீட்டெடுத்ததால் என்னை பிணம்மாகி சென்றாய் இன்று.

எழுதியவர் : கலைச்செல்வி (16-Aug-20, 9:39 pm)
சேர்த்தது : கலைச்செல்வி கி
பார்வை : 582

மேலே