மெய் மையல் காண்

உன்னை ஒத்த சாயல் ..
திணை பெருமை வெளிகாட்ட
மையல் வழி
தேடி சென்று...
தாப தேவை ஆற்றி விட்டு..
காதல் என்று சொல்வதென்ன..

கம்மி ஊடே
இழையங்கள்
வெளியேரும்
நாள் தள்ள..
தூரம்
தூரம் சென்றதென்ன..

மயக்கதிலே முற்பகுதி
பத்தியத்தில் பிற்பகுதி..
எட்டு அரி சிடுக்கு
சிறு மஞ்சனம் சிறு கலஞ்சி
அணிவித்து இன்புற..
தலைகீழே பக்குவமாய்
ஏதும் அறியா
உயிர் பிண்டம்
வீழ்ந்ததென்ன...
-ES

எழுதியவர் : Eswar (16-Aug-20, 9:48 pm)
சேர்த்தது : Eswar
பார்வை : 138

மேலே