மாறிய மகிழ்ச்சி தருணங்கள்
காதலி கடைக்கண் பார்வை பட்ட தருணம்..
கவர்ந்த ஆண்மகன் காதல் சொன்ன தருணம்..
சிசுவின் முதல் அழுகை கேட்ட தருணம்..
தன்பிள்ளை முதல் காலடி வைத்த தருணம்..
தாயின் மடியில் தலை சாய்ந்த தருணம்..
பெற்ற பிள்ளைகள் பேர் வாங்கிய தருணம்..
தேர்வில் நன் மதிப்பெண் பெற்ற தருணம்..
பிடித்த கல்லூரியில் கால் பதித்த தருணம்..
முதல் உழைப்பின் ஊதியம் பெற்ற தருணம்..
முதல் முறை கண்ட விமான பயண தருணம்..
சுற்றுலா குழுவாய் பயணித்த தருணம்..
சமூகப் பணியில் தன் பங்காற்றிய தருணம்..
இல்லாதோர்க்கு முடிந்த தானம் தந்த தருணம்..
இத்தருணங்கள் தந்த மகிழ்ச்சிகள் மறைந்ததோ
தானெடுக்கும் சுயபடத்திற்கும் சுற்றோர் தரும்
விருப்பு பாராட்டுக்களுக்கு இந்நாளில்..
மகிழ்ச்சி தருணங்கள் மறைந்து போனதோ
நிகழ்வை பதிவு செய்யும் எண்ணத்தினால்
சமூக ஊடகத்தில் பகிரும் நாட்டத்தினால்..
நிகழும் மகிழ்வுகள் அக்கணமே மரணிக்கின்றன
கையடக்க கைபேசியில் யாருமறியாமல்..
---------------
சாம்.சரவணன்