தொடர்பில்லா தொடர்புகள்

அம்மா அப்பாவின்
அலைபேசி எண்கள்
அழிக்கவும் இயலாமல்
அழைக்கவும் இயலாமல்
அலைபேசி நினைவகத்தில்
தொடர்பில்லா தொடர்புகளாய்..
அலைபேசியும் அழுதிடுமோ
அழுதிடுமென் மனதறிந்து..
-------------------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (16-Aug-20, 9:53 pm)
சேர்த்தது : Sam Saravanan
பார்வை : 794

மேலே