இணைய வகுப்பு
இணைய வகுப்பில்
இணைந்து பாடங்கள் பயில
இளசுகளுக்கும் பிஞ்சுகளுக்கும்
இலகுவாக இல்லையோ?
இல்லை தம் வகுப்பறையில்
இனிய நண்பர்கள் சேர
இயல்பாய் படிக்க
இயலாததை எண்ணி
இதயம் வருந்துதோ?
இருவிழி இமைக்காமல்
இருக்கையில் அமர்ந்து
இரு செவிகளுக்குள்
இறங்கும் பாடங்கள் யாவும்
இனிதாக இல்லையோ?
இரு கால்களை அடக்கி
இரு கைகள் தொங்கி
இருக்கையில் இருகியது
இன்னல் உணர்த்துதோ?
இயன்ற வரையில்
இல்லத்தில் இருந்து
இன்னல் பாராமல்
இணைய வகுப்பெடுக்கும்
இனிய ஆசானை போற்றுவோம்..
இதெல்லாம் கடந்து
இணைய வகுப்பு
இல்லாமல் பள்ளியில்
இணைந்து பாடங்கள் யாவும்
இனிதாய் பயின்றிட
இறைவனை வேண்டுவோம்...
------&&&-------
சாம்.சரவணன்