தொடா தொடு பேசி

தொடு பேசியை
தொடும் தூரத்திலிட்டு
தூக்கத்தை தொலைத்து
தொலைத்த தூக்கத்தை
விடியலில் விதைத்து
வீட்டு ஏச்சுதனை தவிர்க்க
தொடு பேசியை
தொடா தூரத்திலிட்டு
ஆழ் தூக்கம் கொண்டு
நன்கனவு சில கண்டு
நடுநிசி அறியாமல்
காலை கதிரவனுடன்
கடமைதனை தொடர
நாள் தோறும் முயல்வோம்..
-------------

சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (17-Aug-20, 2:33 pm)
சேர்த்தது : Sam Saravanan
பார்வை : 624

மேலே