தற்படம்

தற்படம் (Selfie)
_______
புகைப்படமெடுப்பின் ஆயுள்
குறையுமென எண்ணியது அக்காலம்..
சுயப்படமெடுக்கா மனிதனும்
இடமுமில்லா இக்காலம்..

ஆலயம் போயினும் தற்படம்..
ஆஸ்பத்திரி போயினும் தற்படம்...

திரைப்படம் பார்ப்பினும் தற்படம்...
தின்பண்டம் தின்னினும் தற்படம்...

மழை கொட்டினும் தற்படம்...
மலை உச்சி ஏறினும் தற்படம்...

சந்தைக்கு போயினும் தற்படம்...
சண்டை நடப்பினும் தற்படம்...

பூக்களை பார்ப்பினும் தற்படம்...
பூஜை பண்ணினும் தற்படம்...

இரயிலில் ஏறினும் தற்படம்...
இரயில் தடம் புரண்டாளும் தற்படம்...

விமானத்தில் ஏறினும் தற்படம்...
விமானம் விழுந்தாலும் தற்படம்...

காளை மாடுகள் முன் தற்படம்...
கழுதை பின் வந்தினும் தற்படம்...

கல்யாண பந்தலிலும் தற்படம்...
கருமாதி துறையிலும் தற்படம்...

குளம் குட்டை காண்பினும் தற்படம்..
குருதி ஆறு ஓடினும் தற்படம்..

அலுவலினிடையே தற்படம்..
அழுது விம்மினும் தற்படம்..

விழா நாட்களிலும் தற்படம்..
விழுந்து கை ஒடியினும் தற்படம்..

கண்கள் கரை ஒதுங்கும்
கன்னங்கள் குழி போடும்
உதடுகள் கூராகும்
மூன்றிலொரு பங்கு தற்படத்தில்...

தற்படமெடுப்பின் தவறொன்றுமில்லை
அத்தற்படமிறுதி படமாகாவரை ..
------------------------------
சாம். சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (17-Aug-20, 10:49 am)
சேர்த்தது : Sam Saravanan
பார்வை : 216

மேலே