புலனம் WhatsApp

கதிரவன் கண் விழிக்கும் முன்
காலை வணக்கம் சொல்ல
காலை துயில் கலைத்தவன் நீ..

கதிரவன் கண் அயர்ந்தாலும்
கைப்பேசி கதறும் வரை
புத்துணர்வாய் இருப்பவன் நீ..

தன் அந்தஸ்துதது தாழ்ந்தாலும்
தன் புலன அந்தஸ்துதது தளராமல் தினந்தோறும் புதுப்பிப்பவன் நீ..

கூட்டு குடும்பங்கள் சிதறினும்
புலன குழுக்கள் தந்து உறவுகளை
புதுப்பித்து புத்துணர்ச்சி தந்தவன் நீ..

காதலது மொட்டு விட பலர்
கைப்பேசி செயலியில் வசிக்கும்
தூங்காத தூது புறா நீ..

குறுஞ்செய்தியதில் காசு பார்த்த
தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு
எதிராக தோள் கொடுத்த தோழன் நீ..

புகைப்படமோ காணொளியோ
கண்ணிமைக்கும் நேரத்தில் எவ்வெல்லைக்கும்
எந்நேரத்திலும் கொண்டு சேர்ப்பவன் நீ..

கைப்பேசி களவு போனால்
புலனச்செய்தி காணா மனிதனை
புலம்ப வைத்து புளுங்கடிப்பவன் நீ..

காசு தேடி சென்ற கணவனவனை
கரம் பிடித்தவள் கைக்குள்
கண்டு ரசிக்க உதவியவன் நீ..

துரியோதனனின் கர்ணன் போல்
சில சமயம் தீவிரவாதி கை கோர்த்து
நாச வேலை நடத்துபவனும் நீ..

புதை குழிக்குள் சிக்கியதை போல்
புலனத்தில் பொழுதனைத்தும்
தொலைப்பவரை உருவாக்குபவனும் நீ..

ஆரம்பம் இருப்பின் முடிவென்று வருமென்று
உற்று நோக்காமல் உலகம் முழுதும்
ஓயாமல் ஓடி உழைப்பவன் நீ..

சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (18-Aug-20, 7:48 pm)
சேர்த்தது : Sam Saravanan
பார்வை : 75

மேலே