எது சுதந்திரம்

சுதந்திரம் வந்தது
ஒற்றுமை போனது...!
தந்திரம் வந்தது
நேர்மை போனது...!
மேலாண்மை வந்தது
உண்மை போனது...!
எண்ணத்தில் சுதந்திரம்
கூட்டுக்குடும்பம் தனியானது!
பேச்சு சுதந்திரம்
காதுகள் கூசும் அளவு வினையானது!
காட்சி சுதந்திரம்
கண்கள் கூசும் அளவு விபரீதமானது!
மீடியா சுதந்திரம்
தனிமனித புனிதங்கள் மறைந்தது...!
சுதந்திரம் எனும் வார்த்தையோ, உணர்வோ தவறல்ல...
பிற மனிதர்களின் மனங்களை காயப்படுத்தும்
உணர்வில்லா மனிதனுக்கு கிடைத்ததால் -இதன்
மகத்துவம் மாறிப்போனது...!
மாறாத மனிதர்களால்...இன்று
சுமக்க இயலா சுமையாய் மாறியது;

எழுதியவர் : சம்யுக்தா ( நரேனி தாசன் ) (17-Aug-20, 8:54 pm)
சேர்த்தது : Samyuktha
Tanglish : ethu suthanthiram
பார்வை : 134

மேலே