கண்ணீரும் கம்பலமுமாய்
கண்ணீரும் கம்பலமுமாய்
கதகதத்த குரலில்
குமுரலும் குழப்பமாய்
விழிக்கின்ற நங்கை..!
கணைகள் விரைந்திங்கே
இதயத்தை தாக்க
சதைகள் கிழிந்திங்கே
செண்ணீராய் சொட்ட ..!
சீறும் வெள்ளம் இவன்
சிறு ஓடையாய் மாற
மாயத்துடிக்கும் நங்கையவள்
வழியின்றி நோக..!
காதலன் எனைநோக்கி
பாயுகின்ற உள்ளம்
ஊரார் இழிசொல்லுக்காய்
கலங்குகின்ற எண்ணம்..!
காமம் கடந்த காதலர்கள் நாங்கள்
காவியம் படைக்கும் தாய்பிள்ளை நாங்கள்
தனக்கென்று ஆசைகள் வளர்க்காத நாங்கள்!
சேர்ந்தோ? பிரிந்தோ? ஒத்தே கழிப்போம் நித்தம் நாளை..!
வீரமணி கி
வயலூர்