கலவுசெய்யும் காமுகி

எட்டி நிற்பினும் கட்டியனைக்கும் காவியகாதலி..!
கண்ணாலே இடைதொட்டிழுத்து
கலவுசெய்யும் காமுகி..!

ஒற்றைவிழிப் பார்வையால்
நித்தம் சுற்றவைக்கும் வாசுகி..!
நெஞ்சோடு நேர்நின்று
யுத்தம் நடத்தும் கோமதி...!

இதழ்சொல்லும் வார்த்தையெல்லாம்
விழியால் சொல்லும் மாயக்காரி..!
விழுக்காட்டா வலிகளைகூட
மௌனமாய் பேசும் தந்தியக்காரி..!

பழிசொல் நானேற்க விழவழி கண்ணீரால்
பழிதுடைத்த பாசக்காரி..!
பதராய் நானிருக்க
நற்பாவாய் வார்த்தெடுத்து குறிச்சிக்காரி..!

வின்மீன் வர்த்தெடுத்து
மாலைகள் சூட்டினாலும்;
தெருநடவே நானமர்ந்து
வெறுங்கையால் மஞ்கலம் பூட்டினாலும்;
இரண்டும் ஒன்றுதான்
நானில்லா வாழ்வது வரண்ட மண்ணுதான்
கண்ணாலே கவிவடிப்பாள்
கம்பனுக்கே கவிகொடுப்பாள்..!

இருவரி வள்ளுவம் போல்
இணைந்திங்கே வாழுவோம்..!
இமைகாக்கும் விழிபோலே
நம்காதலை காத்திடுவோம்..!

வீரமணி. கி

எழுதியவர் : வீரமணி. கி (18-Aug-20, 7:39 pm)
சேர்த்தது : Mani Mathi
பார்வை : 228

மேலே