Mani Mathi - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Mani Mathi |
இடம் | : vriddhachalam |
பிறந்த தேதி | : 14-Jun-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Aug-2020 |
பார்த்தவர்கள் | : 80 |
புள்ளி | : 35 |
ஆயிரம் பிறை கண்ட சூரியனே!
தமிழுண்டு பகைவென்ற தமிழ் பாவலரே !
ஈராயிரம் ஆண்டுகளாய் தமிழர் - நலன்
காக்கும் வள்ளுவரே!
#முத்தமிழ்_காவலரே!
என் உயிர் கலைஞரே...!
நாடாளாப் பிறந்தவனே!
தமிழ்நாடாண்ட பெரும்கவியே!
ஆரூர் அறுந்தமிழே!
யுகம் காணும் அற புறத்தமிழே!
ஞாலப்பெருந்தகையே - தமிழ்
மூலக்குறுத்தொகையே
ஆழப்பெரும் கடலே - தமிழ்
ஆழ்ந்த பெருமகனே!
வீரத்திருமகனே - தமிழ்
பறைஉன் புகழ்கூறும்
நித்தம் தினமே !
சூரத்தமிழ்மகனே - தமிழ்
ஆழ்கடலால் அவனியை ஆண்ட
உமைத்-தேடி புகழ் வருமே..!
மூவடிப்பயின்று முவ்வுலகம் ஆளும்;
முக்கனிசுவையை தேனாய் உமிழும்!
சக்கரநாற்காலி சேரிகளை புரட்டும்;
ஆரியகழமத்தை
திராவிட அரக்கர்களின் பெரும் தலைவா;
தமிழ் இலக்கியங்களின் மூத்த புலவா!
மானுடசமூகத்தின் முதுபெரும் அறிஞ்ஞா;
இந்திய துணைகண்டத்தின் சமூகநீதி முதல்வா...!
இந்திய அரசியலின் கறுவூலம் நீ ;
ஆரியப்படையால் அசைக்கமுடியா இமயம் நீ !
இலக்கிய சோலையில் நயாகரா நீ ;
கவிதைகளில் எனாறுமே வயாகரா நீ !
அஞ்சுகம் பெற்றுடெத்து அரிஸ்டாட்டில்;
முதலாலித்துவத்தை உடைத்தெரிந்த மார்க்ஸ்!
சமூகநீதி காப்பதில் நீங்கள் கலைஞர் ;
சித்தாந்த அரசியலின் இந்தியாவின் தலைவர்..!
தரனி தாலாட்டு பாட
வங்கக்கரையில் உறக்கம் - உன்
தமிழ் இல்லமால்
எங்களுக்கு இல்லை தினம் உறக்கம்
உன் மரணத்தில்
சதிசெய்து பார்த்த ஆரியம்
அரக்கர்
தமிழோ தேனூரும் -உந்தன்
மொழியோ ஆரிய-திராவிட களமாடும்
அழகு சிரிப்போ கவிபாடும்
தமிழர் வாழ்வோ - உன்
பேனாவில் விடுதலை பெறும்...!
தலைவா
இடுகாட்டுக் கூட்டங்களுக்கும்
படிகட்டு அமைத்த தலைவா
முரண்பாடு காட்டியவனை
அரன்போல காத்த தலைவா..!!!
நாடோ துடிக்கிறது
நலனின்றி தவிக்கிறது
முக இல்லாததால் - தமிழர்க்கு
பெரும் தாக்கய் விழுகிறது...!
காக்கும் அரசு இங்கே - விரோத
போக்காய் மாறிவிட்டதால்
போர் மூண்டு நடக்கிறது - போரில்
தமிழர் நலன்கள் செத்து மடிகிறது...!
நீ இல்லா காரணத்தால்- சிலர்
நா நீண்டு பேசுகிறார்
நானே அரசனென்று பிதற்றுகின்றார்
பாவம் அவர் அறியார்
நீ உருவாக்கி வைத்த பல பெரியார்
உண
நேரெதிர் கண்டதில்லை
மனவரம் கொண்டதில்லை
உடன்பிறக்க வாய்ப்பு இல்லவே இல்லை
உயிர் கசிய அழுகின்றான்...
கைவிரல்கள் தீண்டியதில்லை
என்பெயரை புசித்ததில்லை - ஒரு நொடிகூட
உன்சிந்தையில் நான் இல்லவே இல்லை
எனினும் நாவரண்டு அழுகின்றான்...
தாய்வழி சொந்தமில்லை
நான் தோள் சாய்ந்த தோழனில்லை
கட்டி அனைத்த காதலி இல்லவே இல்லை
கண்சிவக்க மாய்கின்றான்...
காலத்தின் சூழ்ச்சி இது
கயவர்களின் ஆட்சி இது
வதந்திகள் வந்துபோகும்
கலங்கவேண்டாம் உடன்பிறப்பே..!
நூறாண்டு சரித்திரம்
ஒருநொடியில் வீழ்ந்திடுமோ..!
கோடி இதயம் பெயர்த்தெடுத்து
ஒரு #கலைஞரை காத்திடுவோம்..!
நன்றி: கி வீரமணி தம்பி...
நெஞ்சம் நிறைந்த தேன்குழலி!- ஒற்றை
பார்வையால் வீழத்தும் பூங்குழலி!- தமிழ்
சொல்லால் மயக்கும் மாகுழலி! - என்
தேம்பலுக்கு கண்கலங்கும் வான்குழலி!
அவள்..! நட்டு வைத்த தென்னங் கன்னு;
அவனியை சுற்ற வைக்கும்
#மாமன்பொண்ணு;
ஓரவிழி பார்வையில்
நெருப்புமூட்டும் நெஞ்சில் நின்னு...!
அவளுக்காய்....
ஆறிரண்டு_திங்கள் தாங்கி நின்றேன்
ஆரல்வாய்மொழி கேட்க காத்துநின்றேன்!
கண்பட்டால் சினுங்கும் #கோபக்_காரி-இன்று
கவி கேட்கின்றாள் #கவிகொடை வள்ளல் பாரி!
#அமிழ்தமே கவிபல அள்ளி செல்லென்பேன்
கிள்ளிகூடா பார்க்காத #தில்லை நீ!
தல்லிநின்று கேட்கின்றாய்
கன்னி தமிழில் #பா ஒன்று தருவாயா என்று..!
அவனிக்கே_ச
அவள் கண்கள்
எனக்கு மணிகாட்டி..!
அவள் கால்களே
எனக்கு திசைகாட்டி..!
அவள் கைகளே
எனக்கு நாட்காட்டி..!
அவள் இடைகள்
என் கவிக்கு_சுவையூட்டி..!
மூச்சு காற்றில்
எனை சூடேற்றி..!
வியர்வை
எனை குளிப்பாட்டி..!
முத்தத்தால்
எனை மெருகேற்றி..!
நொடிப் பொழுதிலும்
நீயே எனை ஆளுகின்றாய்...!
ஓர விழி பார்வையாலே
காதல்_மழை_பொழிகின்றாய்..!
தென்றலோடு மிதக்கின்ற
இசைக்கேது காதலர்தினம்..!?
ரோஜா இதழோடு பேசுகின்ற
வண்டுக்கேது தனியே காதலர்தினம்..!?
நீரோடு ஒட்டி ஒட்டா
தமரை இலைக்கேது காதலர்தினம்..!?
மலரோடு சேர்ந்து பிறந்த
மணத்திற்கேது காதலர்தினம்..!?
மழையோடு பேசும்
மண்வாசனைக்கேது காதலர்தினம்..!?
எவளும் போட்டியிடமுடியாத அழகி..!
அவளிடம் கேட்டு பெறமுடியாத முத்தம்.!
கேட்காமல் கொடுக்கும் மௌனப்புன்னகை!
தவிர்க்கமுடியாத தவிப்பு!
ருசிக்கமுடியாத கொவ்வை இதழ்கள்!
வருடமுடியாத அவள் இடைகள்!
நேருக்குநேர் காணமுடியாத கண்கள்!
திரும்பினால் காட்சிக்கழகான பின்னல்!
அவள் கம்பன் எழுதாத கவிநூல்.!
மழலைமனம் மாறா சினுங்கள்!
பார்ப்பவனெல்லாம் கவிகொள்ளும்
உடை நடைகள்..!
இன்பத்துப்பாலை தனியே தரும் மதிநூல்!
வானத்தில் தோன்றா நிலா!
முக்கனிகளில் அவள் பலா!
மேகங்களால் மறைக்கமுடியா கவிஉலா!
பூவிதழில் மிதக்கும் பனித்துளி!
ஒருசொட்டு நீரில் மூழ்கடித்த காதல்துளி!
கண்ணால் காயப்படுத்தும் கவிப்புலி!
ஆண