தமிழோ தேனூரும்

தமிழோ தேனூரும் -உந்தன்
மொழியோ ஆரிய-திராவிட களமாடும்
அழகு சிரிப்போ கவிபாடும்
தமிழர் வாழ்வோ - உன்
பேனாவில் விடுதலை பெறும்...!

தலைவா
இடுகாட்டுக் கூட்டங்களுக்கும்
படிகட்டு அமைத்த தலைவா
முரண்பாடு காட்டியவனை
அரன்போல காத்த தலைவா..!!!

நாடோ துடிக்கிறது
நலனின்றி தவிக்கிறது
முக இல்லாததால் - தமிழர்க்கு
பெரும் தாக்கய் விழுகிறது...!

காக்கும் அரசு இங்கே - விரோத
போக்காய் மாறிவிட்டதால்
போர் மூண்டு நடக்கிறது - போரில்
தமிழர் நலன்கள் செத்து மடிகிறது...!

நீ இல்லா காரணத்தால்- சிலர்
நா நீண்டு பேசுகிறார்
நானே அரசனென்று பிதற்றுகின்றார்
பாவம் அவர் அறியார்
நீ உருவாக்கி வைத்த பல பெரியார்
உண்டென்பதை அவர் அறியார்...!

தலைவா
தமிழ் தாயின் புதல்வா
இவ்வுலகம் உன்னை மறக்கலாம்
உன் பேச்சில் உன் மூச்சின்
உயிர்பித்தவன் நான்
மறவேன் உயிர் உள்ள வரை
உனை மறவேன்....!

- வீரமணி கி

எழுதியவர் : வீரமணி. கி (19-Aug-20, 1:26 pm)
சேர்த்தது : Mani Mathi
பார்வை : 183

மேலே