நேரெதிர் கண்டதில்லை

நேரெதிர் கண்டதில்லை
மனவரம் கொண்டதில்லை
உடன்பிறக்க வாய்ப்பு இல்லவே இல்லை
உயிர் கசிய அழுகின்றான்...

கைவிரல்கள் தீண்டியதில்லை
என்பெயரை புசித்ததில்லை - ஒரு நொடிகூட
உன்சிந்தையில் நான் இல்லவே இல்லை
எனினும் நாவரண்டு அழுகின்றான்...

தாய்வழி சொந்தமில்லை
நான் தோள் சாய்ந்த தோழனில்லை
கட்டி அனைத்த காதலி இல்லவே இல்லை
கண்சிவக்க மாய்கின்றான்...

காலத்தின் சூழ்ச்சி இது
கயவர்களின் ஆட்சி இது
வதந்திகள் வந்துபோகும்
கலங்கவேண்டாம் உடன்பிறப்பே..!

நூறாண்டு சரித்திரம்
ஒருநொடியில் வீழ்ந்திடுமோ..!
கோடி இதயம் பெயர்த்தெடுத்து
ஒரு #கலைஞரை காத்திடுவோம்..!

நன்றி: கி வீரமணி தம்பி...

எழுதியவர் : வீரமணி. கி (19-Aug-20, 1:26 pm)
சேர்த்தது : Mani Mathi
பார்வை : 112

மேலே