வைரவிழா தலைவனுக்கு

வைரவிழா தலைவனுக்கு
===================================

முத்தமிழ் வித்தகருக்கு
நற்றமிழ் சொல்லெடுத்து
பா ஒன்று புனைகின்றேன்
நான் புலவனல்ல – உன்
பகுத்தறிவு சொல்லில் பிறந்திட்ட
பதரென்பதால் பா ஒன்று புனைகின்றேன் …!

அகவை தொன்னூற்று நான்கில்
வைரவிழா கானும்
சங்கத் தமிழ் தொல்காப்பியரே!
முத்துவேல் அஞ்சுகம் பெற்றெடுத்த
ஆருர் களஞ்சியமே !

கண்ணீரை மையாக்கி
எண்ணங்களை மெய்யாக்கி
யுகம் கானும் தலைவனே
கவிதையில் வாழ்த்துகிறேன்
காவியமே உனை வணங்குகிறேன்…!

உம் கரகரத்த குரல் கேட்க
கண்ணுறக்கம் தினம் தொலைத்தோமய்யா
சமூக பணியாற்ற உம்
நாற்காலி சக்கரமாய்‌ வாழத்துடிக்கின்றோமய்யா!

நீண்ட அலகை
தட்டி உடைத்து
புது பிறவி காணும் இராசாளிப்போல்;
முதுமையின் ஒவ்வாமையை
தட்டி உடைத்தெறிந்து
வைரவிழா காணும் இராசாளி நீயே
என் கவிதைகளின் ராசாவும் நீயே..!

மனுதர்ம பாதங்களை
பகுத்தறிவு பாதங்களால் போரிட்டார்
சூத்திர பஞ்சமர்களுக்காய்
வாழ்நாள் முழுவதையும் தந்திட்டாய் !

இந்தி பேயினை விரட்டிடவே
தமிழ்கொடி பிடித்து போரிட்டாயதமிழை செம்மொழியாக்க
நீதானே வித்திட்டார்
அதை வென்றிட்டாய்..!

மானிட சமுத்திரத்தில்
மூன்றாம் பாலினத்தை
மூடர்கள் சிலர் வேண்டுமென்றே
வெறுத்து ஒதுக்கினார்
வேதனையில் அவர்களை ஆழ்த்தினர்;

தமிழ்த்தாயின் முலையில்
முப்பால் குடித்திட்ட தமிழனல்லவா நீ!
முத்தமிழ் நாட்டினரின்
மூவேந்தர் வாழ்த மண்ணில்
முக்கனி சுவை உண்டு நாவால்
மூன்றாம் பாலினத்தை வெறுத்திடல்
கூடாது கூடாது அது
தமிழுக்கு ஆகாது ஆகாது எற்றுரைத்து
முத்தமிழ் போல் இட ஒதுக்கீடு தந்து வாழவைத்தாய்..!



திராவிடன் ஆண்டிட்ட நாட்டில்
ஆரிய பகுத்தறிவு
மடமை வேத ஏட்டில்
வீழ்த்த திராவிடனோ சூத்திரனாம்
ஆடோட்டி ஆரியனோ பார்ப்பனனாம்?

நாடு எங்கும்
மனுநீதி பறவிற்று
திராவிடன் கிடக்கின்றான்
நடுரோட்டில் வீழ்ச்சியுற்று!

அண்ணல்
பெரியார்
அண்ணா துணைகொண்டு
கருவறையில் வேதத்தை அகற்றிட்டாய்
கல்லோ கடவுளோ- இனி
வேதமில்லை தமிழ் நாதமேன
சட்டம் இயற்றிட்டாய்….!
சக்கர நாற்காலியில் அமர்ந்தே
வேத சூழ்ச்சிகளை வென்றிட்டாய்…!

களைப்பாறும் முதுமையில்
களம் கண்டு களித்திட்டாய்
தமிழ் தமிழர் எழுச்சி தனித்
இன்பம் கொண்டிட்டாய்…!

சூரிய உதயம் தோறும்
சுட்டெரிக்காதா உன் குரல் என்னை
சூரியனோடு சுவாசிக்கின்றாய்
சிலவோடு தமிழ் நலம் பேசுகின்றார்
இதயத்துடிப்பின் தமிழ் தமிழரென்றே
யாசிக்க்றாய்
தலைவா…..
நீ நடக்க வேண்டும்
உம் குரல் கேட்டு நான் களிக்க வேண்டும்
வேண்டுகோளோடு வாழ்த்துகிறோம்
வாழ்க தமிழ் உள்ளவரை…!

- வீரமணி கி

எழுதியவர் : வீரமணி. கி (19-Aug-20, 1:24 pm)
சேர்த்தது : Mani Mathi
பார்வை : 129

மேலே