முரசொலி கண்டவரே

முரண்பட்ட சமூகத்தில்
முழுமீசை முளைக்காப் பருவத்தில்
முரசொலி கண்டவரே
முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரே..!

வணக்கம்....!

மூத்த சிகரங்கள் வாழ்த்தி அமைந்தனர்
உடன் பிறப்புகளோ கண்டு மகிழ்ந்தனர்
காற்றும் மழையும் தலைவணங்கி படிந்தன
வானும் மண்ணும் வாழ்த்துப்-பா பாடின..!

கரகரத்த குரல் கேளாமல்
கண்கலங்கி அழுகின்றேன்
தமிழே உன் பிம்பம் காணாமல்
கண்மூடி சாய்கின்றேன்..!

உன் மூத்த குழந்தையென
மூத்தோர்கள் வாழ்த்தினர்..!
மூப்பில்லா உம்தமிழை
காவிஞர்கள் கவிவடித்தனர்..!
முரசொலி வளர்ச்சியை
முரண்களின் அரண்களும் வாழ்த்தின!
முரசொலி தீ பிழம்பானதை
கலித்த உள்ளங்களும்
கண்கலங்கிய உள்ளங்களும்
ஒருசேர சேர வாழ்த்தினர்..!

மணம்கொள்ளா பெண்ணோருத்தி
மடிநிறைந்தால் எவ்வலியோ..?!
பொருள் இல்லா ஏழைக்கு
பெண்பிள்ளை எவ்வலியோ...?!
நெஞ்சோடு மகிழ்ந்த காதலி
கண்முன்னே மாண்டல் எவ்வலியோ
அத்தனையும் தோற்று போகும்
முரசொலி கடந்துவந்த பாதையெல்லாம்
இரத்த கரைகள் நினைவு மூட்டும்...!

யாப்பில்லா கவியென
விமர்சித்தப் போதும்
தமிழ் காப்பிற்காய்
மூப்பிள்ளா என் தமிழை
பொதிசுமந்த காத்துவந்தாய்
அதன் பதிப்பிற்கு நித்தம்
உழைத்து வந்தாய்..!

காதல் கண்கட்டும் அரும்பு வயதில்
மொழிகாப்பு இனமீட்பில் களம்கண்டாய்
முரசொலி எனும் ஏட்டில்
படைதளபதிகளை வளர்த்து வந்தாய்..!

முரசொலி கண்டவனும்
உன் நண்பன் தெண்ணவனும்
மூத்தபிள்ளையை வளர்த்தெடுக்க
வாடிவந்த கதையெல்லாம்
வடுக்களாய் கணுகின்றோம்
வளர்ச்சியாய் பேனுகின்றோம்..!

முரசொலி எரிகின்றது
உடன்பிறப்புகள் எல்லாம் களங்குகின்றனர்
துரோகம் சிரிக்கின்றது
துயரம் தொண்டையை அடைக்கின்றது..!

சாம்பளில் பிறந்த சகாப்தமாய்
சங்கில் பிறந்த முழக்கமாய்
பறை இசையின் வலிமையாய்
புத்துயிர் தந்தாய் அய்யா
பவலவிழா காட்டுகின்றாய் அய்யா..!

மங்கள இசை பொழிகின்றது
பாவளர்கள் வாழ்த்தும் குவிகின்றது
உடன்பிறப்புகள் ஆரவாரம் தொடர்கின்றது
முத்தமிழ் வித்தகரை காணவில்லை
நற்றமிழ் வார்த்தையாவும் சுவைக்கவில்லை.....
நான் உன்னையின்றி ஒருவரையும் ரசிக்க வில்லை ...!

தலைவா
தமிழாய் உன்னை காத்து வந்தோம்
மழலை அமிழ்தாய் வளர்த்து வந்தோம்
மானமும் அறிவும் முரசொலியால்
பெற்ற நாங்கள்
வேண்டுகோள் ஒன்று விடுகின்றொம்
புகழ் பறந்த தமிழினத்தில்
மலர்ந்த கலைஞருக்கு
தலைமை இன்னும்
நூறாண்டுகள் தருக என்று
பனையமாய் என்னெயே பெறுகயென்று..!

வீரமணி கி

எழுதியவர் : வீரமணி. கி (19-Aug-20, 1:24 pm)
சேர்த்தது : Mani Mathi
பார்வை : 157

மேலே