கலைஞர்

கலைஞர்..!!!
===========

திருக்குவளை ஈன்றெடுத்த தமிழ்..!
செம்மொழி கொண்ட தமிழ்...!

பெரியார் அண்ணா இதயத்தை
இரவலாய் பெற்ற தமிழ்...!

பதிநான்கு வயதிலே
தமிழ்கொடி ஏந்திய தமிழ்...!

இந்தியை ஏற்கமாட்டேன்
மாட்டேன் என - தமிழை
காத்த தமிழ்...!

பகுத்தறிவை விதைத்திடவே
நித்தம் நித்தம்
உழைத்திடும் தமிழ்...!

தீண்டாமை தீர்திடவே
சமத்துவபுரம் கொண்ட தமிழ்...!

உலக தமிழர்களின் முகவரியாம்
நீ - தமிழ்...!

உலக வரலாற்றை புரட்டினால்

இரஷ்யனுக்கு லெனின்...!
சீனனுக்கு மாஓ...!
பாலஷ்தினனுக்கு அராஃபாத்...!
தமிழனுக்கு ஓர் கலைஞர்...!

தலைவா

தமிழர் பெருமையை
நீள வைத்த சீன பெருஞ்சுவரே...!

தமிழில் நலினம் நனைய
எழுதுவதில் பேசுவதில் நயாகரே...!

தமிழனை இலக்கிய மலராய்
மனம் வீச வைத்த
பாபிலோன் தோட்டமே...!

உன்னை என்னென்று அழைப்பேன்

சிலர் தலைவர் என்பார்
தத்துவ மேதை என்பார்
நடிகர் என்பார்
நாடக வேந்தர் என்பார்
சுவைமிக்க எழுத்தாளர் என்பார்
மாநிக்கம் என்பார்
மாநில முதல்வர் என்பார்
அன்னை என்பார்
அன்னை தமிழ் என்பார்
அத்தனையும் தனி தனியே சொல்ல நேரம் இல்லாதவர் உன்னை கலைஞர் என்பார்...!

நீ வாழ்க பல்லாண்டு .

வீரமணி கி

எழுதியவர் : வீரமணி. கி (19-Aug-20, 1:23 pm)
சேர்த்தது : Mani Mathi
பார்வை : 210

மேலே