வாழ்த்து-பா

வாழ்த்து-பா
=========
மாணவ நேசனுக்கும் -என்
தமிழ் ஆசானுக்கும்
அறிஞர் அவர் தம்பிக்கும்
ஈவேரா கிழட்டு மாணவனுக்கும்

சமூகநீதி காவலருக்கும்
செம்மொழி கொண்டோர்க்கும்
தமிழன்னை பிள்ளைக்கும்
உலக தமிழர் தலைவருக்கும்

பிறந்தநாள் வாழ்த்து-பா
பஞ்சமனின் புகழ்ச்சி-பா
சேரிகளின் வணக்கம் -பா
மூத்தகுடி வழங்கும் - பா

ராமனையும் , பீமனையும்
கௌரவரையும் , பாண்டவரையும்
தமிழ் அம்பெய்தி வென்றிட்டாய்..!

கம்பனையும் , கண்ணகியையும்
போப்பையும் , வள்ளுவனையும்
நீயே அறிமுகம் செய்திட்டாய்..!

குருட்டு நம்பிக்கையால்
இருண்ட மானுடத்தை
முரட்டு தமிழ் பேசி
விரட்டி நீயடித்தாய்..!

சங்க சரக்கு தமிழெடுத்து
பழகுதமிழ் முலாம் பூசி
பகுத்தறிவு தேன்கலந்து
தெகுட்டாமல் தமிழ் வளர்த்தாய்..!

சொக்கின்ற கடவுள் வாழ்த்தில்
இரண்டர கலந்த தமினெல்லாம்;
முரசொலியில் கொட்டுகின்ற
தமிழை அல்லி முரசுகொட்ட துவங்கிட்டான்.!
பகுத்தறிவு முரசுக்கொட்ட துவங்குட்டான்..!

நக்கி பிழைக்க வந்த
நரிகள் (ஆரிய) கூட்டமோ
திராவிடத்தை வீழ்த்த எண்ணி
நயவஞ்சகம் புரிந்திட்டான்
நாடு முழுக்க
கயம கடவுளை பரப்பிட்டான்!

காட்டுத்தீ தனல் போலே
காட்டாற்று வெள்ளம் போலே
தமிழர் வீழ்ச்சிதனை தடுத்தடவே
ஆரூரிலே தமிழன்னை
உனை ஈன்றுட்டாள்..!
தமிழர்க்கு அறுதலாய் உனக்கு முன்னே
பெரியாரையும் அண்ணாவையும் தந்திட்டாள்..!

கருத்து பெட்டகமே
களம் உன்னை கண்டபின்பு
காணுகின்ற காட்சியெல்லாம்
தமிழர் எழுச்சி..!
பேசுகிறோர் நாவிலெல்லாம்
தமிழ் மனக்கும் காட்சி..!

அண்ணாவுக்கு பின்னே
ஆட்சி அமைத்துட்டாய்
அவனி போற்ற நல்லாட்சி புரிந்திட்டாய்.!
வர்னாசிரம பட்டங்களை அடித்திட்டாய்
கருவறையுலும் பஞ்சம நாதம் பாடவைத்தாய்..!

தமிழ் பண்டிகைகளை
வகுத்து தந்திட்டாய
தை முதல் நாளே
தமிழர் திருநாள் என்று சட்டம் இயற்றிட்டாய்
பார்ப்பன சாம்ராஜ்ஜியத்தை உடைத்திட்டாய்..!

தமிழர் வீழ்ச்சி கலைந்து
மாட்ச்சி காணுகின்ற வேலையுலே
வெண்செம்பு பாலெடுத்து
தமிழன்னை பால்காலந்து
கண்ணீர் மல்க ஊட்டுகின்றோம்
யுகம் காணும் பிறந்தநாளில்
வைரவிழா காணுகின்றோம் - இன்நாளே
தமிழர் எழுச்சிநாளாய் பாடுகின்றோம்..!

நெஞ்சிருக வாழ்த்துகின்றேன்-என்
இயலைப்பாதி உமக்காய் தருகின்றேன்
நூறு யுகம் வாழ வேண்டும்
தமிழர் எழுச்சிக்கும்
நூறு யுகம் வாழ வேண்டும்....! தலைவா..!

வீரமணி கி
வயலூர்

எழுதியவர் : (19-Aug-20, 1:22 pm)
சேர்த்தது : Mani Mathi
பார்வை : 31

மேலே