என் உயிரே

என் உயிரே - தமிழ்
கவிதைகளின் தளிரே!காலம் உன்னை தீண்டி பார்க்கின்றது;
தமிழர் செவிகள் உன்குரல் கேட்க
ஏங்கி தவிர்க்கின்றது ..!

பஞ்சமனை பாவலராக்கி
மிஞ்சியவனை அஞ்சவைத்த
அஞ்சுக புதல்வனே;
என் பாக்களின் தலைவரே!

உம்மை எண்ணும்போதெல்லாம்
அழுது மாய்கின்றேன்;
உன் மௌனத்தில் ஆயுள் தண்டனை கைதியாகின்றேன்!

பட்டிக்காட்டு இளவரசா
பட்டுடல் மேனி தமிழரசா
முத்தமிழை ஆளும் பேரரசா
எம்மை கலங்க வைப்பது நியாயமா ராசா?

உம்படத்தை போட்டு
ஆளுக்காள் எழுதுகின்றார்கள்;
உம் படத்தை பார்த்து
நாளுக்கு நாள் ஏங்குகின்றேன் !
தேறிவந்துவிடு தேன் நிலவே
திராவிடதேசம் காத்திருக்கு
நீ ஆண்டிடவே..!

- வீரமணி கி

எழுதியவர் : வீரமணி. கி (19-Aug-20, 1:22 pm)
சேர்த்தது : Mani Mathi
Tanglish : en uyire
பார்வை : 159

மேலே