எம்மை இருளில் ஏன் ஆழ்த்தி சென்றாய்
இதயத்தை
நிறுத்திக்கொண்டாய்
எம்மை இருளில் ஏன் ஆழ்த்தி சென்றாய்..
துயரத்தை
விதைத்துச் சென்றாய்;
துணிவுமிகு தம்பிகளை
ஏனய்யா தனிமையில்
விடுத்துச் சென்றாய்..
தொண்டை மறுத்தாலும்
தொண்டாற்ற மறுக்காத தலைவா
கோடி தொண்டர்கள்
கண்ணீரை யாரய்யா துடைப்பார்..?
கரகரத்த குரலில்
உன் கவிதைப்பால்
ஊண்டு வளர்ந்தோம்...
குரலை ஏன் நிறுத்திக்கொண்டாய்..?
உன் எழுத்தை படித்தே
எழுத்துலகை கற்று வந்தோம்
எழுதும் விரலை ஏன் மடக்கிக்கொண்டாய்..!
இமயத்தையும் குமரியையும்
இருகையால் இயக்கிடுவாய்
தமிழர் வாழ்விற்க்கே
இதயத்தை தினம் இயக்கிடுவாய்...
இதயத்தை நிருத்திக்கொண்டு
இயங்க மறுப்பதென்ன சிறுமை....
எந்தன் இதயத்தை காந்த குரல்வந்து
துலைப்பதென்ன கொடுமை...
நீ மண்மூடி போவதற்க
தம்பிகள் கண்மூடா காத்திருந்தோம்...
வான் இருண்டு அழுகுதய்யா
தமிழகத்தை வள்ளிருட்டு சூழுதய்யா...
எழுந்து இயங்கவில்லை
எழுத இயலவில்லை.....................
அய்யா.........
கி வீரமணி