திராவிட தலைவர் கலைஞர்_95
திராவிட தலைவர் கலைஞர்_95
=========================
திராவிட பெரும் கிழவா
தமிழ் மானுட பெரும் தலைவா !
மா பலா வாழை சாறது உன்தமிழா
தமிழர் வாழ்வது உன் துணையே !
முத்தமிழ்_வித்தகரே
அஞ்சுகத் தாயவள் பெற்றவரே !
சங்கத்தமிழ் கற்றவரே – திடலில்
அரசியல் சாணக்கியம் பயின்றவரே !
தமிழர் அகம் புறம் அறிந்து
பகைவர் எதிர் மறை தெரிந்து
உடன்பிறப்புகள் மனநிலை புரிந்து
களமாடும் கலித்தொகையே – உன்
முதல் வெற்றி #குளித்தலையே..!
அமிழ்து தேனோடும் தமிழ்வீதியில்
நஞ்சு வடமொழி திணித்ததால்
பிஞ்சு இதயங்களை ஒன்று திரட்டி
தமிழ்கொடி பறந்திடவே எதிர்முழக்கமிட்டவரே
பெரியார்_அண்ணா இதயத்தில் அமர்ந்திட்டவரே!
ஏடெடுத்து படிக்கச் சென்று
முக்காலத் தமிழ் வளம்பெற்று
முரசொலி ஏட்டிற்கு அரசனானாய்
தமிழ் நாட்டிற்கு நீ #தலைவனானாய் !
நாதா சுவாமி நயவஞ்சக மொழியால்
அடிமையுற்ற கலைத்துறையை
அடுக்குமொழி தமிழ் பேசி
அடக்குமுறை செய்த அவாளை
ஒடுக்குமுறை செய்த தலைவா
தமிழ் கலைத்துறையின் #தவபுதல்வா !
இயல்
இசை
நாடகத்தமிழால்
தமிழர்
துயில்
துக்கம்
துன்பம் கலைத்தவரே
திராவிட இனத்தின் #தலைவரே..!
மூவேந்தர் பிரித்தாண்ட ஆண்டை நாட்டை
சங்க
இடை
தற்கால தமிழ் ஊட்டி
முக்கனி சுவை காட்டி
திராவிட இன மாண்பு பூட்டி
ஐந்துமுறை தமிழினத்தை #ஆண்டவரே
அறிவாலயத்தில் தமிழை #ஆள்பவரே !
பிறப்பில் என்னடா உயர்வு தாழ்வு
மனிதர் நினைப்பில் உள்ள பழைய கழிவு
ஆண்டான் அடிமை பேதம் உடைக்க
பகுத்தறிவு கட்டிடமே #சமத்துவபுரம் !
வலியோரை எளியோர் தூக்கி சுமப்பதை
கல்சிலையா கண்டும் காணாமல் நானிருக்க
எளியோர் வலிதனை துடைத்திடவே
தூக்கி எறிந்தார் கைவண்டியை !
தலையில் தூக்கி அலைந்தார்
அருந்ததியர் இட ஒதுக்கீட்டை !
மூன்றாம் பாலினத்தை
முகம் சுழித்து ஒதுக்கல் ஆகாது
தமிழர் ஒழுக்கத்திற்கு தகாது
#திருநங்கையர் எனப் பெயர்சூட்டினார்
தரணிக்கே வழிகாட்டினார் !
தமிழர் வாழ்வுதனை
ஈரடியால் நெறிபடுத்தியதால்
நூறடியில் வள்ளுவர்_சிலை !
தேரா மன்னரை
தமிழ்கொண்டு கொன்றதனால்
#கண்ணகிக்கு மெரினாவின் சிலை !
உலகின் முன்பிறந்த மூத்ததமிழை
நோன்பிருந்து காத்து வந்து
தான்பிறந்து மொழியதற்கு
தன்வாழ்நாளில் மகுடம் சூட்டி
வெற்றிக்கும் தோல்விக்கும் இடைதனிலும்
செம்மொழி கொண்டவரே
எங்கள் துயில் கலைக்கும் #சூரியரே !
சக்கர நாற்காலியில் அமர்நதுகொண்டு
அரசியல் ஆடு புலி ஆட்டமதில்
ஆட்சியரை அரிக்கையுல்
அதிரவைக்கும் தலைவா
பெரியார் அண்ணா கண்டெடுத்த தமிழ் #புதல்வா !
வாழிய_வாழியவே
நீ நீடூழி வாழியவே ..!
கி வீரமணி