கலைஞர்

கலைஞர்

விண்ணை மண்ணாக்கி
மண்ணை மலையாக்கி
தன்னை உரமாக்கி
தமிழை வளர்த்த தலைவா !

பேச்சால் வகுத்டெடுத்து
எழுத்தால் போர்தொடுத்து
நடையில் களம் அமைத்து
தடையை உடைத்தெறிந்த தலைவா !

காற்றை தடுத்து
கையால் அமுக்கி
ஊற்றை விதைத்து
உழவை காத்த தலைவா !

சோம்பல் கிழித்து
சுடரை நீட்டி
வட முதல் தென்வரை
ஆதிக்கம் செலுத்திய தலைவா !

மனதை திடமாக்கி
வலியை விதைத்து
உலியை தனதாக்கி
தன்னை தானே செதுக்கிய சுயம்பு தலைவா !

பார்த்து நீண்ட நாளாயிற்று
இன்முகம் காட்டேன் தலைவா..!

கி வீரமணி

எழுதியவர் : வீரமணி. கி (19-Aug-20, 1:20 pm)
சேர்த்தது : Mani Mathi
பார்வை : 217

மேலே