வெற்று அறை அல்ல
வெற்று அறை அல்ல..!
===================
வெற்று அரையல்ல - தமிழர்
தமிழ் கற்ற அறை ;
சற்றும் குறையில்லை- தாயின்
கருவறைக்கு சற்றும் குறையில்லை..!
நெடு நெடு வான் உயர்
நிற்கும் வள்ளுவர்
விறு விறு விறுவென
கலைப்பார
மையம் உற்ற அரையிது...
வெற்று அறையல்ல - தாயின்
கருவறைக்கு சற்றும் குறையில்லை..!
பெரியார் அண்ணா அன்னை
துரை ராசா சுபவீ
சூழ்ந அறையிது
ஆதிக்க சூழ்ச்சியை
வீழ்த்திட்ட அரை
வெற்று அறையல்ல - தாயின்
கருவறைக்கு சற்றும் குறையில்லை..!
சங்க தமிழும் சந்தன கமழும் - தினம்
தொண்டர் படையோ சந்தித்து மகிழும்
உலக கிழவர்கள் வாசிப்பு நிகழும்
குரளோவியம் படுத்துறுங்கம்
அற்புத அறை
வெற்று அறையில்ல - தாயின்
கருவறைக்கு சற்றும் குறையில்லை..!
ஆண்டான் அடிமை பேதம் உடைத்து
சாதி சடங்கை கருஅறுத்து
சமத்துவம் சகோதரத்துவம் வளர்த்தெடுத்த
சமூகநீதி அறையிது
வெற்று அறையில்ல- தாயின்
கருவறைக்கு சற்றும் குறையில்லை..!
கோவில் கருவறையை கண்டதில்லை
உனை கோவில் கருவறையாய் எண்ணியதில்லை
கல்லாய் வீழ்ந்திருக்கவில்லை
தமிழ் சொல்லாய் வென்றிருத்த
தலைவரின் அரை
வெற்று அறை அல்ல - தாயின் கருவறைக்கு சற்றும் குறையில்லை..!
கி வீரமணி