வற்றாத தமிழ் உனக்கு
வற்றாத தமிழ் உனக்கு - அதை
நாள்தோறும் சுவைத்திடவே செவி எனக்கு
இளங்கன்றாக கவி நீ பாடு
தேனீயாக நான் மயங்கிடவே..!
சத்தான தமிழை தந்து
பித்தான தமிழர் நெஞ்சை
வில் அம்பாக பட்டை தீட்டு
வீணர்களை வீழ்த்தும் தலைவா..!
யாப்பில்லா கவியெனினும் - தமிழ்
மூப்பில்ல அறம்பல சேர்த்து
காப்பில்லா தமிழர் நாட்டை
விழியினிலே தாங்கிய தலைவா..!
அக்காலம் புலவர் கூட்டம்
இக்கால இளைஞர் கூட்டம்
நிக்காத மழையை போல - யாவரும்
விடியும் வரை தூங்கவில்லை...
இக்கால தலைவரெல்லாம் - கலைஞர்
வற்றாத தமிழை காண
படையெடுத்து சூழுகின்றார் - நீ
படுக்கையிலும் தலைப்பு செய்தியாய் வாழுகின்றாய்..
இரவெல்லாம் கண்ணீர் சுமந்த காரணத்தால்
பால் சுரக்கும் தாயுல்லம்
மழலை பசிதீர்க்க வழில்லை
முப்பால் கலந்து கவி தருக..
என் முத்தமிழே முப்பால் கலந்து கவிதருக..
மாய்வதுதான் முடிவு எனில்
வீழ்வதற்கு நான் உண்டு
ஆண்டிடவே நீ பிறந்தாய் - எம்மை
துக்கத்தில் ஆழ்த்துவதென்ன உன் கணக்கு..
மண்சோறு திங்கமாட்டோம்
மண்டியிட்டு வீழமாட்டோம்
நட்டு வைத்த பகுத்தறிவு நாங்கள் - நீ
நீண்டு வாழ தமிழன்னையை வேண்டுகிறோம்..
மீண்டு வா தலைவா
நலமுடம் மீண்டு வா தலைவா...!
கி வீரமணி