எவளும் போட்டியிடமுடியாத அழகி

எவளும் போட்டியிடமுடியாத அழகி..!
அவளிடம் கேட்டு பெறமுடியாத முத்தம்.!
கேட்காமல் கொடுக்கும் மௌனப்புன்னகை!

தவிர்க்கமுடியாத தவிப்பு!
ருசிக்கமுடியாத கொவ்வை இதழ்கள்!
வருடமுடியாத அவள் இடைகள்!

நேருக்குநேர் காணமுடியாத கண்கள்!
திரும்பினால் காட்சிக்கழகான பின்னல்!
அவள் கம்பன் எழுதாத கவிநூல்.!

மழலைமனம் மாறா சினுங்கள்!
பார்ப்பவனெல்லாம் கவிகொள்ளும்
உடை நடைகள்..!
இன்பத்துப்பாலை தனியே தரும் மதிநூல்!

வானத்தில் தோன்றா நிலா!
முக்கனிகளில் அவள் பலா!
மேகங்களால் மறைக்கமுடியா கவிஉலா!

பூவிதழில் மிதக்கும் பனித்துளி!
ஒருசொட்டு நீரில் மூழ்கடித்த காதல்துளி!
கண்ணால் காயப்படுத்தும் கவிப்புலி!

ஆண்டுகள் கடந்தது
ஆறிரண்டு திங்கள்.!
மனம் தேடுகின்ற
நாளோ - தைமாத திங்கள்.!
உறவுகள் கூடுகின்ற
மகிழ்ச்சி வேளையில்!
மணை ஏற்க்க வேண்டும்
நெகிழ்ச்சி சோலையில்.!
பாடுகின்ற கவிதையெல்லாம்
கூடலிலே கூடவேண்டும்;
உடலிலே கரையவேண்டும்..!

இரண்டொரு திங்களில்
சாம்பல் தினம் தேடவேண்டும்!
மலர் காம்பினிலே
பால் சுரக்கவேண்டும்.!
அமிழ்து தமிழினிலே
கவிதை ஆயிரம் வடிக்கவேண்டும்.!
கால் நகத்திற்கு
முத்தமழை பொழியவேண்டும்.!

கட்டி தழுவிட எண்ணமில்லை
கட்டில் படுக்கை தேவையில்லை
கட்டிகருப்பே
நடு நெத்தியில் ஒரு முத்தம்!
தலை சாய்ந்திட
உன் மடி தேவை நித்தம்.!

காட்சி பிழையோ!
கவிதைக்குள்
இனிக்கிற மழையோ!
வண்டோடு
பேசுகின்ற மகரந்தமே!
என் கவிதையின் ஆதி அந்தமே!

உனை பாடி கழியுது நாட்கள்
எனை பார்த்து அழுகின்ற பூக்கள்
வாட்டி வதைக்குது சோகங்கள்
நீ பார்த்தல் !
கை கோர்த்தால்!
ஓடி ஒழிந்திடும் மன வாட்டங்கள்!- எனை
தேடி ஒட்டிக்கொள்ளும் மகிழோட்டங்கள்..!

வீரமணி கி வயலூர்

எழுதியவர் : வீரமணி. கி (18-Aug-20, 7:52 pm)
சேர்த்தது : Mani Mathi
பார்வை : 585

மேலே