பா-இயற்ற பதுமை ஒருத்தியை கேட்டனர்

உலக பாவலர்கள்
ஒன்று கூடி
தமிழன்னையிடம்
பா-இயற்ற பதுமை
ஒருத்தியை கேட்டனர்..!

தமிழன்னையோ
எவ்வித அழகில்
வேண்டுமென்றாள்..!

பதில் சொன்ன பாவலர்கள்
கற்புகரசி கண்ணகியென்றனர்;
கண்ணால் மயக்கும் அழகு மாதவியென்றனர்;
கம்பன் காப்பிய சீதையென்றனர்;
வள்ளி குறத்தியென்றனர்;

குழம்பிற்ற தமிழன்னை சொன்னால்
அகம் புறமென அழகினை பெற்று
சங்கத்தமிழும் இன்பத்துப்பாலும்
ஒருங்கே பெற்று;
பிறந்திட்டாள் பருவ மங்கை குறிச்சியிலே..!
கவிவடிக்க காவலானாய்
அமைந்திட்டான் இவ்வவனியிலே..!
புறப்படுக புலவர்களே என்றாள் தமிழன்னை...!

விழிபிதிங்கிய புலவர்கள்
தேடித் தீர்த்தனர்;
உடல் நலிவுற்று கிழை எய்தினர்..!

தாயின் கருவரையில்
படித்தறிய முற்பட்ட நான்
குறிச்சி அழகில் மயங்கி போனேன்
தமிழ் உணர்ச்சி பெற்று கவிஞனான்

காப்பிய தலைவியை அறியவே
தமிழன்னையிடம் வினாவினேன்.!
கலகலவென சிரித்த தமிழ்த்தாய்
நீ தேடும் பாவையவள்
உன் காதலியென்றாள்
அவளை கவி வடிக்க
பிறந்திட்டும் காவலனோ நீதான் என்றாள்..!

திகைத்துப் போய் சொன்னேன்
கண்ணீர் ததும்பி நின்று சொன்னேன்
காப்பியமும் அவளும்
நேர் நிறை
அறியா கிழை எய்திய புலவர்களே
மா நிறை..!
அவளை கவி வடித்தே தேய்கின்ற
நானோ தேய் பிறை...!
இருவருக்கும் இடையில்
எப்போது படறும் காதல் திரை..!

தமிழன்னையோ
நீ பிறந்திடுக சோழ மண்ணில்
அவளும் பிறப்பாள் உன்
மண்ணோடு ஒட்டிப்பிறந்த மண்ணில்
தொடரட்டும் புது காதல் காவியம் அவனியில்...!

தமிழன்னை சொல்படி
ஆவனியில் கருதரித்து
வைகாசியில் பிறந்திட்டேன்
அவள் சித்திரையில்
கருத்தரித்து தையிலே பிறந்தாள்
தமிழாகவே நிறைந்தாள்...!

என் தமிழுக்கு பிறந்தநாள்
என் காப்பிய தலைவிக்கு பிறந்தநாள்
என் கவிதைக்கு பிறந்தநாள்
என் காவியமே பிறந்தநாள்
இன்று பிறந்தநாள்...!

வாழ்க பல்லாண்டு ..!
மகிழ்க என்னோடு...!

பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!

உன்னவன்
வீரமணி கி

எழுதியவர் : வீரமணி. கி (18-Aug-20, 7:53 pm)
பார்வை : 83

மேலே