ஆயிரம் பிறை கண்ட சூரியனே

ஆயிரம் பிறை கண்ட சூரியனே!
தமிழுண்டு பகைவென்ற தமிழ் பாவலரே !
ஈராயிரம் ஆண்டுகளாய் தமிழர் - நலன்
காக்கும் வள்ளுவரே!
#முத்தமிழ்_காவலரே!
என் உயிர் கலைஞரே...!

நாடாளாப் பிறந்தவனே!
தமிழ்நாடாண்ட பெரும்கவியே!
ஆரூர் அறுந்தமிழே!
யுகம் காணும் அற புறத்தமிழே!

ஞாலப்பெருந்தகையே - தமிழ்
மூலக்குறுத்தொகையே
ஆழப்பெரும் கடலே - தமிழ்
ஆழ்ந்த பெருமகனே!

வீரத்திருமகனே - தமிழ்
பறைஉன் புகழ்கூறும்
நித்தம் தினமே !
சூரத்தமிழ்மகனே - தமிழ்
ஆழ்கடலால் அவனியை ஆண்ட
உமைத்-தேடி புகழ் வருமே..!

மூவடிப்பயின்று முவ்வுலகம் ஆளும்;
முக்கனிசுவையை தேனாய் உமிழும்!
சக்கரநாற்காலி சேரிகளை புரட்டும்;
ஆரியகழமத்தை - உம்
திராவிடசொல் விரட்டும்!

ஆண்டை வீட்டு நாற்றங்கால் நடுவிலே ;
முழங்கால் சேற்றுக்குள் நின்றிருந்தோம்!
தமிழர் ஏற்றல்கள் பெறுவதற்காய்
கவிஊற்றுகள் பல தந்தாய் அய்யா;
வசவர் கூற்றுகளையும் ஏற்றாய் அய்யா!

மூப்பில்லா சிரு வயதில்
யாப்பில்லா கவியெனினும்
காப்பில்லா கிடந்த தமிழை
பக்குவமாய் காத்துவந்தாய்
தமிழர்காய் கண்ணையும்
இழந்து நின்றாய்!

தொண்டையது வற்றினாலும்
தேகமது சுருங்கினாலும்
ஒவ்வாமை உனை தழுவினாலும்
முதுமையின் கோரத்திலும்
தமிழ் வளர்க்கின்றாய்;
மழலைத்தமிழால் சாறுபிழிகின்றாய் !

வைரங்கள் கொண்டதில்லை
வைரத்திற்காய் மாண்டதில்லை
வைரவிழா காணத் துடிக்கின்றேன்
கலைஞரே வந்துவிடும்
கரகரத்த தமிழ் தந்துவிடும் - இல்லையேல்
தமிழர் மனம் நொந்து அழும்....!

வீரமணி கி
வயலூர்

எழுதியவர் : வீரமணி. கி (19-Aug-20, 1:28 pm)
பார்வை : 382

மேலே