அவள்

அவள் கண்கள்
எனக்கு மணிகாட்டி..!
அவள் கால்களே
எனக்கு திசைகாட்டி..!
அவள் கைகளே
எனக்கு நாட்காட்டி..!
அவள் இடைகள்
என் கவிக்கு_சுவையூட்டி..!

மூச்சு காற்றில்
எனை சூடேற்றி..!
வியர்வை
எனை குளிப்பாட்டி..!
முத்தத்தால்
எனை மெருகேற்றி..!
நொடிப் பொழுதிலும்
நீயே எனை ஆளுகின்றாய்...!
ஓர விழி பார்வையாலே
காதல்_மழை_பொழிகின்றாய்..!

தென்றலோடு மிதக்கின்ற
இசைக்கேது காதலர்தினம்..!?
ரோஜா இதழோடு பேசுகின்ற
வண்டுக்கேது தனியே காதலர்தினம்..!?
நீரோடு ஒட்டி ஒட்டா
தமரை இலைக்கேது காதலர்தினம்..!?
மலரோடு சேர்ந்து பிறந்த
மணத்திற்கேது காதலர்தினம்..!?
மழையோடு பேசும்
மண்வாசனைக்கேது காதலர்தினம்..!?

அவள் நெற்றி முடி சுழர்ச்சியில்
இல்லாத காதல்
காதோடு பேசுகின்ற
தோகையில் இல்லாத காதல்
முத்திடாத மூக்கில்
மயங்காத காதல்
அவள் பின்னலில்
சிக்காத என்காதல்!
அன்ன நடையில்
தளும்பாத காதல்..!
அவள் இடை !
உடை!
தொடை!
காட்டாத ;
கவி ஊட்டாத காதல்..!
இத்தினத்தில் வருமோ!?
கதலர் தினமென்னும்
ஒற்றைதினத்தில் முடியுமோ ..!?

நொடிப் பொழுதை
யுகமாய் உண்டு ரசிக்கும் நாம்..!
சின்னஞ் சிரிப்பில்
சிதைந்து கிடக்கும் நான்
சத்தமின்றி சினுங்கையில்
என்ன மணி
புள்ள சினுங்குது
உதைக்கு அலையுது'யெனும்
வார்த்தையில் தழுவிக்கொள்ளும் நாம்.!

நீ உச்சரிக்கும்
வார்த்தைக்கெல்லாம்
உச்சிக்கொட்டி ரசிக்கும் நான்..!
என் ஒத்தவரி கவிதைக்கே
விழா எடுத்து வியக்க
வைக்கும் உன் நா...!
கைபேசியில் சிரிக்கையிலே
அள்ளித் தெளிக்கும் முத்தத்தில்
ஆர்ப்பரித்து வியக்கவைக்கும் நான்..!
"ச்சீ" போடா என
சிரித்துக்கொண்டே
அனல் கக்கும்
நொடிகளில் காணாத காதலை
காதலர்தினம் காட்டுமோ...?

காதலர்களே
காதல் செய்யுங்கள்..!
காதல்தான்
மனிதனை மனிதனாக்கும்..!
காதல் உள்ளவரைதான்
காதலீர்ப்பு விசையில்
சுயற்ச்சியெல்லாம்..!
காதலர் தினத்தில் மட்டுமல்ல
நொடிப்பொழுதும் காதல் செய்வீர்..!
காதலர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்..!

வீரமணி கி
வயலூர்

எழுதியவர் : வீரமணி. கி (18-Aug-20, 7:51 pm)
சேர்த்தது : Mani Mathi
Tanglish : aval
பார்வை : 644

மேலே