கோழையாக கடந்து போகின்றேன்
அவள் கண்ணீருக்கு
பதில் சொல்ல தெரியாத
கோழையாக கடந்து போகின்றேன்...!
அவள்
சிவந்த கண்களுக்கு
வாடிய இதழ்களுக்கு
கசிந்தொழுகும் காதலுக்கு
பதில் சொல்ல தெரியாத
கோழையாக கடந்து போகின்றேன்...!
நாம்
பார்த்து பேசி பழகிய
நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்;
தள்ளி நின்று பார்பவர்கள்
இதன் கரு-அறியா
ஆயிரம் விமர்சனம் சொல்லிவிடலாம்;
உனக்கும் எனக்கும்தானே தெரியும்
இரு கண்களின் சந்திப்பில்
இமயத்தை உடைக்கும்
அனு சிதைவின் ஆற்றலென்று...!
கண்மூடி திரப்பதுபோல்
கழிகின்ற காலம்!-நம்
நெஞ்சத்தை கிழிக்கின்ற
நம் காதல் உப்பின் சாரம்..!
கலங்காதே.....
என் கவிதைகளே
உன் கண்ணீர் துடைக்கும் கைகுட்டை!
என் நினைவுகளே
உன் சுவாச காற்ற!
என் விரல் பட்ட இடமெல்லம்
நம் காதல் நினைவு சின்னங்கள்!
இவைகளை ருசித்துக்கொண்டே இரு
விரைந்து வருகின்றேன்-உன்
விழி வழி வழியும் கண்ணீரை
இதழ் வழி தொட்டு துடைக்க
விரைந்து வருகின்றேன்..!
உன்னவன்
வீரமணி_கி
வயலூர்