ஓர் இரவு இரு நிலவுகள்
ஓர் இரவு
இரு நிலவுகள்
முவ்விருக்கைகள்..!
பசி உழன்றிட-அவள்
சிரிப்பை தின்றிட
நகர்ந்தது மெல்ல பேருந்து..!
நானத்தில் சிவந்தது மகிழுந்து...!
பக்கத்திலே நான் இருக்க
தென்றல்வந்து காது கடிக்க
பால்நிலவோ எட்டிநின்று ரசிக்க
பாவையவள் சீண்டவில்லை..!
தென்றலையும் பால்நிலவையும்
பதுமையவள் சீண்டவில்லை..!
கல்வைத்த காதணியது
காதல் கதிர்வீச;
முத்திடா மூக்கது
எனை தினரடிக்க;
ஓரக் கண்ணால்
ஓர் #முத்தபார்வே வீசிட;
தேனொழுகும் இதழினை
நாவால் நீ வருட;
மலர்குவியல்_மார்பிற்கோ
மயங்கி போனேன்.!
குலுங்குகின்ற பேருந்தில் கவிஞனானேன்..!
இருக்கையில்
தலைசாய்ந்து
இதயத்துடிப்பை
இழுத்துபிடித்துக்கொண்டு
"அடியே"யென்றேன்..!
நெடு நெடுவென வளர்ந்த முருங்கை
தென்றலிலே ஒடிந்தது போல் - அவள்
ஓரவிழி பார்வையில் நான் விழுந்தேன்!
விளக்குகள் அனைந்தன;
இருசோடி விழிகளோ சங்கமித்தன;
மொழியில்லை மழலைபோலே
மனம்வீசும் மல்லிபோலே
ஆறிரண்டு திங்கள் தீண்டாத விரல்கள்
காதல் பொருக்க கன்னியவளோ
இருக்கி பிடித்துக்கொண்டாள்
என் #கரத்தினை இருக்கி பிடித்துக்கொண்டாள்...!
எரிமலை சிதரலாய் எரிகின்ற நெஞ்சம்
பெண்தொட்டு அனைந்ததே காதலின் உட்சம்
கவிகொண்ட வடித்திட வார்த்தைகள் இல்லை
அவள் கால் தொட்டு கிடக்கின்றேன் - இதுவே
என் காதலின் எல்லை...!
தவறென்று உழன்றுகின்ற
அவள் நா - காதல்
தவிப்பினில் தொடர்கிறது
நெருக்கமது தானா..!
காசிந்தொழுகும் காதலுக்கு
பதிலில்லை என்னிடம் ! - காதலை
தலைகோவி கூரினேன்
அமைதிமொழியில் உன்னிடம்..!
நெருக்கங்கள் மூண்டன
காதல் தேடல்கள் கூடின
முகத்தோடு முகம் வைத்து
காதலை கூரினேன்!
முதல் முத்தம் சூடினேன்!
இன்பத்துபாலதை இரவினில்படித்திட்டேன்..!
நீண்ட பயனம்;
தெகுட்டாத இரவு;
பனிரெண்டாண்டு
தேடலின் துவக்கம்;
இனிதே தொடர்ந்தது
என் கவியும் அவள் கண்ணத்தில் தொடர்ந்தது...........!
வீரமணி கி
வயலூர