நெஞ்சம் நிறைந்த தேன்குழலி
நெஞ்சம் நிறைந்த தேன்குழலி!- ஒற்றை
பார்வையால் வீழத்தும் பூங்குழலி!- தமிழ்
சொல்லால் மயக்கும் மாகுழலி! - என்
தேம்பலுக்கு கண்கலங்கும் வான்குழலி!
அவள்..! நட்டு வைத்த தென்னங் கன்னு;
அவனியை சுற்ற வைக்கும்
#மாமன்பொண்ணு;
ஓரவிழி பார்வையில்
நெருப்புமூட்டும் நெஞ்சில் நின்னு...!
அவளுக்காய்....
ஆறிரண்டு_திங்கள் தாங்கி நின்றேன்
ஆரல்வாய்மொழி கேட்க காத்துநின்றேன்!
கண்பட்டால் சினுங்கும் #கோபக்_காரி-இன்று
கவி கேட்கின்றாள் #கவிகொடை வள்ளல் பாரி!
#அமிழ்தமே கவிபல அள்ளி செல்லென்பேன்
கிள்ளிகூடா பார்க்காத #தில்லை நீ!
தல்லிநின்று கேட்கின்றாய்
கன்னி தமிழில் #பா ஒன்று தருவாயா என்று..!
அவனிக்கே_சொல்தந்த_மண்ணில் - உன்
அழகிற்கு உவமை இல்லையடி - ஏழு
செம்மொழிகளும் ஏமாற்றி #கொல்லுதடி!
ஏக்கத்தை_கவிவடித்தே
உன் #குறையை தீர்த்திடுவேன்;
ஏக்கங்கள் எரியும் தீ'யென்பதால்
கவிவடிக்க தயங்குககன்றேன்;
குறிச்சி மலரின் புண்ணகை பூ
நோகுமென்பதால் கவிவடிக்க தயங்குகின்றேன்...!
பருத்தி மெத்தையில் புரண்டிட்ட அழகென்ன
புருவம் உயர்த்தி பேசுகிற கவிமொழியென்ன
பகிரியில் படர்ந்திட்ட பருவமங்கை- அவள்
பார்வையில் வீழ்த்தும் பதுமை நங்கை...!
சொல்வேந்தன் இன்பத்துப்பால் காணுகின்றேன்;
இருவிழியில் இரட்டைகிழவியாய்
சர சரவென வீழ்கின்றேன்..! - உன்னோடு
அடுக்குமொழி ஆயிரம் பேசி மகிழ்ந்திடுவேன்
இடுக்கில் தெரிந்த_இடைநெலிவே
கவிதை என்பேன்....!
பெண்ணே உன் இடை நெலிவே
என் கவிதையென்பேன்...!
வீரமணி கி
வயலூர்