கண்ணகிக்கு நிகர் கற்ப்பிளங்_கன்னி

கண்ணகிக்கு நிகர் கற்ப்பிளங் கன்னி
கவிதைதமிழில் கண்ணால் பேசுகிற பொன்னி
அனுமதியின்றி நெஞ்சை பிளங்திட்ட காதல் அணுக்கரு - நீயே
கவிதைகள் கை வணங்கும் உயர்திரு...!

வன்சொல்லுக்கு மத்தியில் பிறந்திட்ட இன்சொல்..!
வர்ணத்தோடு வாழாத வள்ளுவம் தந்த நன்சொல்...!
குள்ளமெனினும் கள்ளமில்லா கன்னிச்சொல்..! -என்
கவிதையோடு வாழும் மூக்குத்தியிடா
முத்தமிழ் சொல்...!

நெறிஞ்சி முட்களோடு பூத்திட்ட குறிச்சி மலர்..!
சாதி தேசத்தில் சகதியை தீண்டிய
மேல்வீதி தலிர்...!-பல
கம்பனுக்கு மத்தியில் கவிதை அன்பனாக்கிய வைணவ மலர்..!
வர்ணங்கள் தாண்டி என்னுல் உறவாடும் வான் மலர்...!

கண்ணீர் மழையில் - என்
நெஞ்சோடு பேசுகிறாள்.....!

வண்டு தீண்டாத மலரின் மென்மையை
#வாலி நீ தீண்டிவிட்டாய்;
வயது வந்த காரணத்தால்
வருகின்றனர் பெண் பார்க்க! - உன்னில்
வயப்பட்டதை
வாய்திறக்க எண்ணினால்
நெருப்பாய் எரிகின்றது;
சாதி நெருப்பாய் நெஞ்சை சுடுகிறது...!

மணி நம் காதல்
சாதி சதியில் பிறந்திட்ட மலம்மில்லை...!
சமத்துவத்தின் வளம்.....

கண்ணீர் விடாதே
கவிதை பூண்டு
களம்பல கண்டு
காத்திருப்பேன் உனக்காய்
பூச்செண்டு கொண்டு....!
கண்ணீர்விடாதே.........!

வீரமணி கி
வயலூர்

எழுதியவர் : வீரமணி. கி (18-Aug-20, 7:46 pm)
பார்வை : 106

மேலே