வஞ்சியவள் வட்ட நிலா
வஞ்சியவள் வட்ட நிலா
வாடிடாத மொட்டு உலா
திங்கள் கண்ணடிக்கும் பரணியுலா
தேனிலவை தேடவைத்த கார்காலப் பலா
மிலகு காரம் மூக்குக்காரி
மிலகாய் சொல் பேச்சுக்கிரி
நெருப்பை கொட்டும் பார்வைக்காரி
கட்டி அனைத்து கண்கலங்கும் பாசக்காரி...
எனை
வார்த்தைகளால் செதுக்கி வைத்தாள்
வகுடெடுத்து தலைவார வைத்தாள்
கன்னிதமிழில் கற்பை கற்றுத்தந்தாள்
கடும் சொல்லால் என்னை சிதைத்து கொன்றாள்...!
காந்துகின்ற மலரைபோல சிரித்த முகம்
வாட்டி வதைத்து வாடிவதங்குகின்ற பெண்ணின்மனம்..!
பாசத்தால் பழுது பார்க்கும் எந்தன் தவம்
எனை பழுதாக்கி செல்ல துடிப்பதென்ன
கண்ணே உன் குணம்...!
ஆறிரண்டு திங்கள் காணாத சினம்
நமக்கு இலைலயடி இன்னொரு யுகம்
பெற்றோர் எண்ணம்படி நடப்பது சிறப்பே
எனைவிடுத்து சென்றால் ஊர்பழி உமக்கே..!
உவமைக்கு சொல்தந்த பிறப்பில் - எனை
ஊமையாக்கி கொல்வதுபோல் உன் நடிப்பு
மணவாசம் காணுவதாய் எண்ணி- உற்றோர்காய்
வனவாசம் போவதென்ன மடத்தனம்...
நெஞ்சுக்குழியை_நடுங்கவைத்த
ஆடவன் நானடி..!
முத்தத்தால் மூழ்கடித்த
உன் காதலன் நானடி..!
சொல்லாலே சொக்கவைத்த
சுந்தரன் நானடி..!
மார்கழியில் தேடவைத்த
உன் மணியும் நானடி...!
எனைவிடுக்க எண்ணுவது
முறையாடி...?
குழம்பி தவிக்கும் #குடும்ப_நங்கையே
எனையின்றி உனைமணக்க எவனும் இல்லையே.
வருத்தத்தில் வடுவதை விட்டுவிடு
தடம்பின்னே செல்வதை தவிற்த்துவிடு
தடம்பதித்து வாழ்வதில் முயற்சி எடு...!
தடங்கள் தவறில்லை
வாழ்வில் சோகங்கள் புதிதில்லை
முயாலாமை வென்றதில்லை
எனினும் உன் குமுரலுக்கே கணவனாவேன்
குமரியுனக்கே நான் கணவனாவேன்...!
சோகத்தில் புரல்வதை விட்டுவிடு
சோம்பலை கொஞ்சம தட்டிவிடு
உன் மணியின் கவிதைக்கும்
கொஞ்சம் செவிகொடு
என்னோடு வாழ்வதா இல்லை வீழ்வதா
என்பதே முடிவாயிரு...!
வீரமணி கி
வயலூர்