கார்பன் துகள்களுக்குல் புதைந்து கிடக்கின்றேன்

கார்பன் துகள்களுக்குல் புதைந்து கிடக்கின்றேன்;
காதல் வலைவீசி கவர்ந்திழுக்கின்றாய்..!
காகிதமலரென உயிரற்று கிடக்கின்றேன்;
கண்ணால் நீ பேசி உயிர் தருகின்றாய்!

வியர்வை மழையினால் கலைத்திட -உன்
ஒற்றை சொல்லில் பனியாறாய் உறைந்திட!
பகிரியில் முகம் பார்த்து சிரித்திட
பசி மறந்து போனேன் -உன்
தமிழ் வந்து என்னை தீண்டிட ...!

கல்லுக்கு உயிர் கொடுக்கும் சிற்பிபோல்
உயிர்களுக்கு உணர்வு கொடுக்கும் தமிழ்காப்பியமே..!
உன் ஏற்ற இறக்கங்களே - என்
உணர்விற்கு உயிர் கொடுக்கும்
நல் கவியுரமே..

சொல் வேந்தர் வள்ளுவருக்கும்
சுவை வேந்தர் கம்பருக்கும்
கவி வேந்தர் தாசருக்கும்
ஏதோ ஒன்று குறையென நினைப்பேன்
உனை எழுதா கைகளை
நீவிர் கவிஞரோயென விளிப்பேன் ?

கட்டியனைத்து முத்தமிட
தொனுகின்ற நேரமெல்லாம் ;
கவிதை ஒன்று வடிக்கின்றேன்!
கட்டி கரும்பே
ஒவ்வொரு வார்த்தையிலும்
ஆயிரம் முத்தமதை நிறம்பத் தருகின்றேன்..!

மடியில் தலை சாய்ந்து - உன்
விரலால் இதழ் வருட
கால்நகத்தை கடித்துண்டு
கரு விழியில் கலைப்பார
கணவொன்று காணுகின்றேன்
கார்காலத்து நிலவே கணவொன்று காணுகின்றேன் !

கை மீது தவழ்வாயோ
கல்லறையில் மலர் வைத்து அழுவாயோ..?

காத்திருக்கும்
உன் அன்பு வீரமணி கி

எழுதியவர் : வீரமணி. கி (18-Aug-20, 7:42 pm)
சேர்த்தது : Mani Mathi
பார்வை : 90

மேலே