முறைத்து அனைக்கும் முரண்பாடு அவள்
முறைத்து அனைக்கும் முரண்பாடு அவள்.!
விழியால் வீழ்த்தும் வினோதம் அவள்..!
சிரித்தே சிதைக்கும் தோட்டா அவள்!
எனைபிரிந்தால் உயிர்துறக்கும் குளத்தாமரை அவள்.!
ஏற்க துணிவின்ற
இழக்க மனமின்றி
அழுது மாய்கின்ற நங்கை !
கண்ணீர் துடைக்க வழியின்றி - நான்
மாய்ந்து கிடக்கின்ற வேங்கை..!
மணைபாசம் மண்ணாக்கி
மாலையிடநினைப்போர் மத்தியில்
தன்காதலை தனலாக்கி
ஈன்றோர் இன்முகம் காணுகின்றாய்.!
மணக்கோலம் என்றேனும் தேடிவரும்
மாலையிட நானங்கே இல்லையெனில்
ஈன்றோர் இன்முகம் கண்டு நெகழ்வாயோ?
நானிட்டமுத்தங்கள்
கண்முன்னே வந்தால்
நான் தொட்ட இடமெல்லாம்
நெருப்பாய் எரிந்தால்
சாம்பலாய் நீயும் போவாயோ
அக்னி சாம்பலில் எனைகொன்று புதைப்பாயோ..?
வீரமணி கி