மீண்டும் வாராதோ

கடகட கடவென விரைகின்ற தொடர்வண்டி
சரசர சரவென வீசுகின்ற சாரலதில்
விருவிரு விருவென எழுகின்ற கவியதில்
மடமட மடவென மூழ்கிட்டேன் முத்தமிழ் உன்னில்..!

பலபல கனவுகள் காண்கின்றேன் -உன்
சிற்சில சிரிப்பினில் வீழ்கின்றேன் -கண்ணால்
கொழுகொழு குமரி பேசுகின்றாள்
பெறுகபெறுகயென முத்தமிழில் முத்தம் பொழிகின்றாள்..!

கலைத்து மாய்ந்திட்டேன் அக்கணத்தில்
அழுது பறழ்கின்றேன் மறுகணத்தில்
நெருங்கி அமர்ந்தென்னை ரசித்திட்ட விழிகள்
முத்தம் சுவைத்து ருசித்திட்ட கொய்யா இதழ்கள்..!

என்னை வருடி தீண்டிட்ட
வஞ்சியவள் விரல்கள் - என்
இளமையை திருடி வென்றிட்ட
நங்கையவள் கன்னங்கள்!
மல்லிகையை கிரங்கி ஏற்றிட்ட
கார்மேக கூந்தல்..!
இடித்து நெகிழ்ந்திட்ட
சிரிக்கியவள் இடைகள்..!

மீண்டும் வாராதோ
வென்றுயெனைப் போகாதோ...?!!!!!

வீரமணி கி
வயலூர்

எழுதியவர் : வீரமணி. கி (18-Aug-20, 7:41 pm)
சேர்த்தது : Mani Mathi
பார்வை : 251

மேலே