உன்னைத்தான் தேடுகின்றேன்
உன்னைத்தான் தேடுகின்றேன்
உனக்காகதான் வாழுகின்றேன்
உன்னையே நேசிக்கின்றேன்
உனக்குள்ளே சுவாசிக்கின்றேன்.
வீசும் காற்றினுள் தேடுகின்றேன்
விழியைல்லாம் கண்ணீரோடு வாழுகின்றேன்
உன் முகம்பார்த்து சிரித்த நாளெல்லாம்
அணுஅணுவாய் கொள்ளுதடி
ஆயுதமின்றி உடல் நோகுதடி..!
கருஞ்சட்டை காப்பியம் நான்
செவிதொட்ட உன் வார்த்தையினால்
கவிசொட்டும் கவிஞனானேன்
உன் 'நா' சுட்ட வார்த்தையினால்
நலனின்றி வாடுகின்றேன்
உயிர் துரக்க வேண்டுகின்றேன்..!
காலம் உன் கால்பிடித்து
கவிவடித்து வாழ்ந்துவந்தேன்
புத்திமாறிப்போனதனால்
புலம்பி நானும் நோகுகின்றேன்.
ஓரவிழியில் இரக்கம் கொஞ்சம் காட்டடி
உதட்டோரம் புன்னகையால் என்னை தாக்கடி
சிரிப்பில் என்னை தீ மூட்டடி
தவறில்லை உன்னை கொஞ்சம் குளிரோற்றடி...!
வீரமணி. கி