முகநூல் பதிவு 80
17.8.2020
வாழ்த்திக் கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களுக்கு
🙏 நன்றி! 🙏நன்றி! 🙏 நன்றி!
உலகில் ஒவ்வொரு உயிரின் பிறப்பும் சிறப்பானதே.... ஆனால் அதை மென்மேலும் சிறப்படைய வைப்பதுதான் அந்தப் பிறப்பின் வெற்றி....
உன்னத ஒழுக்கமான வாழ்க்கைமுறை, தன்னலம் கருதா காரியம் செய்யும் முனைப்பு, ஏதோ ஒரு துறையில் மாபெரும் சாதனை.... இவைகளே ஒரு மனிதனை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது....
ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாள் மகிழ்வான நாட்கள் தான்......விமர்சையாக கொண்டாடா விட்டாலும் , அன்றைய நிலைக்கும் வசதிக்கும் ஏற்ப, என் பிறந்தநாளை மிகவும் மகிழ்வான நாட்களாக மாற்றிவிடுவார்கள் என் பெற்றோர்.... ஆகஸ்டு மாத ஊதியம் வந்தவுடன் அவர்கள் முதல் செலவே என் பிறந்தநாளுக்கு புத்தாடை வாங்குவதுதான்.... அதற்கு என் பெற்றோர் கடை கடையாக ஏறி இறங்குவார்கள்..... அப்போதைய லேட்டஸ்ட் பேஷன் எதுவோ அதையே தேர்ந்தெடுப்பார்கள் .... மேக்ஸி, மிடி,ஹரேரா.... இன்னும் என்னென்னவோ.....உடையின் வண்ணத்திற்கு ஏற்ப வளையல், கம்மல் ,பொட்டு , ஹேர் பேண்டு..... இதை வாங்குவதற்கு என் அம்மா மிகவும் பிரயத்தனம் எடுத்துக் கொள்வார்கள்.... வீட்டில் அன்று வடை பாயாசம் என்று தடபுடலாக சமையல்..... பிறந்தநாளன்று எனக்கு அலங்காரம் செய்து பல கோணத்தில் என்னை ரசித்து பள்ளிக்கு அனுப்பி வைப்பார் அம்மா .... புத்தாடையில் பார்த்தவுடன் ஆனந்தக் கண்ணீர் சொரிவார் தந்தை.... அண்ணன் தம்பி இருவரும் என்னைவிட அதிகம் மகிழ்ச்சியில் திளைப்பர்....
அண்ணன் பிறந்தப் பின்பு.....அடுத் பிரசவத்திற்கு தாய்வீட்டிற்கு செல்லும்போதே, அப்பா பெண் பிறந்தால் நான் மிகவும் அதிர்ஷ்டசாளி என்றார்களாம்....,..உண்மையில் அம்மாவிற்கு சிரமம் கொடுத்தே பிறந்திருக்கிறேன்.... பிரசவத்திற்கு சில நாட்களுக்கு முன் அம்மாவை கறுந்தேள் கொட்டி மிகவும் வேதனையை அனுபவித்துள்ளார்கள் ......பிரசவ வேதனையின் உச்சத்தில் இருக்க.... அன்று அம்மாவாசையாம்.... அக்கம்பக்கம் உள்ள உறவுகள் எல்லாம் அப்போதே வசைபேச தொடங்கினார்களாம்.... “ஐயய்யோ! இவ அம்மாவாசைக்கு பிள்ளைய பெத்துருவா போலருக்கே” என்று முகத்திற்கு நேராக பேச.... அம்மா மிகவும் நொந்து போய்விட்டார்களாம்....
அம்மாவாசை முடிந்து மூன்று நாட்கள் கழித்து பிறந்தேன் .... அதுவும் இரண்டாக மடிந்து பிறந்து... அம்மாவிற்கு மிகுந்த வலியை கொடுத்திருக்கிறேன்....
“எம்மாடி இரண்டா மடிச்சிலா பொட்டச்சி பிறந்திருக்கா... ஒருத்தருக்கு அடங்க மாட்டா...ரொம்ப திமிரு பிடிச்சவளா தான் இருப்பா” என்று , பிறந்த போது என் குணநலனை கணித்த மேதை அந்த ஊர் மருத்துவச்சி.... இதை நான் பிடிவாதம் செய்யும்போதெல்லாம் அம்மா சொல்லிக் காட்டுவார்......
நடுத்தரக் குடும்பம் என்றாலும் அன்பின் சீராட்டத்தில் மகாராணி போல்தான் வளர்ந்தேன்.... ஆனால் நோயின் அவதியால் பெற்றோருக்கு மிகுந்த மனக் கவலையை கொடுத்துள்ளேன் ..... மற்றபடி என்னால் பெரிய தொந்தரவும் அவர்களுக்குப் கிடையாது, பெரியதாய் மகிழ்ச்சியையும் அவர்களுக்கு நான் தந்ததில்லை.....
என் பெற்றோரைத் தவிர என் பிறந்தநாளைக் கொண்டாட நட்பு வட்டங்கள் எனக்குக் கிடையாது.... கல்லூரியிலும் சரி,ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும் சரி.... அவ்வளவாக பெரிய நட்பு வட்டம் இல்லை.... ஏனென்றால் நான் திமிர் பிடித்தவள் என்ற முத்திரை என்மீது குத்தப்பட்டிருந்தது....
அதற்குப் பின் பிறந்தநாளை மிகவும் விமர்சையாக கொண்டாடுவது என்னுயிர் மாணவச் செல்வங்களே.... அவர்கள் பெற்றோர் உடன் பிறந்தவர் பிறந்தநாட்களை ஞாபகம் வைத்திருக்கிறார்களோ இல்லையோ.... என் பிறந்தநாளை அவர்கள் மறப்பதே இல்லை..... என்னை வாழ்த்துமழையில் நனைத்து விடுவார்கள் .... அவர்கள் கொடுத்த பரிசுகள் இன்றும் அன்பின் சின்னமாய்,அரிய பொக்கிஷமாய் என்னிடம்.....
ஆனால் 2010 இந்த முகநூலில் கணக்குத் தொடங்கியதில் இருந்து.... என் முகமே அறியாத, ஒருமுறை கூட பேசிப் பழகாத ஆயிரமாயிரம் முகநூல் நட்புகள் என் பிறந்தநாளில் வாழ்த்தி என்னை அன்பில் திணற வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்
ஏன் பிறந்தோம் என்று சில சந்தர்ப்பங்கள் எனை நினைக்க வைத்தாலும்,
இந்த அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நான் மிகவும் கடமை பட்டவள் என்ற எண்ணமே,இப்புவியில் என் பிறப்பின் பலனை உணர்த்த உதவும் மாபெரும் உந்து சக்தியாக மாறிவிடுகிறது.....
வை.அமுதா என்ற அன்றைய அடையாளத்தை கொடுத்தவர்கள் என் பெற்றோர்....
அமுதா டீச்சர் என்ற அடையாளத்தை சிறப்பிக்க வைத்தது என் மாணவச் செல்வங்கள்....
கவிதாயினி அமுதா பொற்கொடி என்ற இன்றைய அடையாளத்தை கொடுத்தது இந்த முகநூல் நட்பு வட்டங்கள்.....
நாளைய அடையாளத்தை ஆண்டவனே அறிவான்...
என் பெற்றோர் ,உதிர உறவுகள், வாழ்க்கைத் துணைவர், மாணவச் செல்வங்கள் ,4750 முகநூல் நட்புகள் , 25580 பின் தொடர்பவர்கள் , 8000 விசிறிகள் அத்தனை பேருக்கும் ...இந்தப் பிறந்தநாளில் என் சிரம் தாழ்ந்த வணக்கத்தையும் , அளப்பரிய அன்பையும் , நெஞ்சார்ந்த நன்றியையும் காணிக்கையாய் செலுத்துகிறேன்!
🙏நன்றி! 🙏நன்றி! 🙏நன்றி!
❤️❤️❤️❤️❤️❤️❤️
உங்களின்
கவிதாயினி அமுதா பொற்கொடி