கடலோடு போட்டி
முரைத்து பார்ப்பதை நிறுத்திக்கொள்
ஆடையில்லா எனக்கு அச்சம் வருகின்றது
தேடிவந்து தீண்டுகின்றாயே - எங்கே உன்
தேவலோக இராணி அழகுமிதக்கும்
தோணி?
கையெட்டும் தூரத்தில் அவள் இல்லை
காற்று வாங்கதான் வந்தேன் -உன்
கவர்ச்சியை காண அல்லயென்றேன்..!
முகத்தை திருப்பிக்கொண்டு சொன்னாள்
என்னை மிஞ்சும் ஓர் அழகோ
உன் காதலி என்றது..?
அடியே
பரந்த பரப்பில்
நிறைந்து கிடக்கும்
கடல் கண்ணியே - நீ
அவள் காலுகளுக்கு நிகர்
ஓர் கவிஞனின் பதர்...!
உன் வளைவு நெளிவு அலைகளை
அவள் கொடி இடை காட்டும்..!
உன் நிர்வாணம் என்ன கவர்ச்சி
பார்ப்பவனையெல்லாம் தீமூட்டும் அவள் கண்காட்ச்சி..!
நீ துள்ளி ஓடும் காட்சியெல்லாம்
அவள் இடை அசைவுக்கு ஈடாகுமா..?
நீயிடுகின்ற ஓசையல்லாம்
அவள் சினுங்களுக்கு ஈடாகுமா..?
உன்னில் பொங்கிவரும் காற்றும்
அவளை அள்ளி அனைக்கையில்
என்விரல்கள் இடை தழுவுகையில்
அவள் நாசியிடும் காற்றுக்கு இணைவருமோ...?
ஏய் கடலே
அவள் ஆளைக்கொள்ளும் அதிசய பிறவி
மேகத்தை தீ மூட்டும் வசியக்காரி
கடலை வத்தவைக்கும் வயாகரா
சூரியனை குளிரூட்டும் புளூட்டோ..!
போதும் போதும்
நிருத்தும் கவிஞரே
உன் தமிழ் சுவைக்க ஆர்வம்தான்
உன்னவள் அழகென்னை தெகுட்ட வைக்கிறது..!
அவளே அழகி
அமிழ்த சுரபி..!
என்றது கடல்....!
வீரமணி. கி