என்ன செய்கிறாயோ

என்ன செய்கிறாயோ?
என உயிரே என்ன செய்கிராயோ?
எனை நினைத்து கவி புணர்கிறாயோ
என் இதழ் சுவைக்க நீ வருவாயோ..!

எனை தீண்டிக்கொண்டே இருப்பாயே
கண்ணால் சீண்டக்கெண்டே சிரிப்பாயே
கோபம் கொண்டால் அனைப்பாயே
சின்ன முருவலுக்கும் முரண்பாடு பெரும்கவி தொடுப்பாயே...!

நொடிகணம் பிரிவிலும்
துடிதுடித்து போவாயே!
நித்திரை இரவிலும்
எனைதுரத்தி வருவாயே.!
என் சரிவளுக்கும்
இடை கொடி நெளிவிற்கும்
நூறு கவி தறுவாயே - அதில்
பேரின்பம் அடைவேனே..
என்ன செய்கிராயோ
என் உயிரே என்ன செய்கிராயோ..

நடுநெற்றி துடிக்கிறது
இருகண்ணும் உறங்க மறுகின்றது
உன் தமிழ் செவிகேளாமல்
உன் கவி இடை தீண்டாமல்
படுக்கையறை எரிகின்றது
பசலை என்னை கொல்கிறது ..!

வீரா ! கவி சூரா..!
இருஇரவு பொருத்துக்கொள்
தலையனையதை அனைத்துக்கொள்
தமிழ் முத்தம் ஒன்று தாரேன்
நல்இரவை கொன்று வாரேன்..!
என்ன செய்கிறாயோ!?-என்
உயிரே என்ன செய்கின்றாயோ..!

வீரமணி. கி

எழுதியவர் : வீரமணி. கி (18-Aug-20, 7:31 pm)
சேர்த்தது : Mani Mathi
பார்வை : 272

சிறந்த கவிதைகள்

மேலே