விழிப்பு
எப்போதும் போல்
நாளைக் காலையில்...
சீக்கிரமாய் எழ வேண்டும்.
எப்போதும் போல்...
பல் துலக்கி, குளித்து,
தலை சீவி, துணி மாற்றி,
அலுவலகம் சென்று,
வேலை செய்வதாகப் பேர்செய்து,
மறுபடி...
மாலை அறை அடைந்து,
நானே சமைத்து,
நானே உண்டு,
நானே கழுவி, நானே துடைத்து,
மிஞ்சிய பொழுதுகளில்,
கவிதை எழுத முயன்று,
கிடைக்கும் நேரங்களில் சில
ஏகாந்தமாய் இருக்கையிலும்...
உறங்க செல்லும் முன்பும்...
அடிக்கடி...
வழி மறித்து...
வம்பு செய்யும்...
உன் ஞாபகங்கள்.
பெருந்துளிகள் கலந்த
அடைமழை என
அத்தனை இரவையும்
ஆக்கிரமித்துக் கொண்டு
அடக்கி ஆளும்.
வம்படியாய்.!!
தூங்குவதாய் பேர்செய்து
கண்களை மூடியபடி...
காத்திருக்கின்கிறேன்..
மறுபடியும்...
மறுநாள் காலை
சீக்கிரம் எழ..!!