என்னவனின் மீது நான் கொண்ட ஆசைகள்
உன்னை மடி சாய்த்து தலை கோதி பேசும்போது தாயாக இருக்க ஆசை
உன்னை கஷ்டப்படாமல் தாங்கி பிடிக்கும் போது தந்தையாக மாறிட ஆசை
உன்னிடம் சேட்டை செய்து விளையாடும் போது சகோதரியாய் மாறிட ஆசை
உன்னிடம் சிரு சிரு சண்டை பிடிக்கையில்
சகோதரன் ஆக ஆசை
உன் தோளில் சாய்ந்து என் சோகத்தை சொல்லும் போது தோழியாக ஆசை
உனக்கு நல்லது ,கெட்டது எடுத்து சொல்லும் போது தோழனாக ஆசை
உனக்கு ஊக்கம் கொடுத்து வழி நடத்தும் போது நலம் விரும்பியாக ஆசை
உனக்கு எல்லாவுமாய் இருக்க
உன்னில் சரி பாதியாய் திகழ உன்
மனைவியாக ஆசை
உன் விரல் கோர்த்து அக்கினிகுண்டம் சுத்திவர ஆசை
அத்தனை ஆசைகளையும் அரசப்பானையில் மறைத்திட ஆசை
மறைந்த ஆசைகளை அரசப்பானயில் நீ மீட்டெடுக்க வேண்டும் என்று ஆசை
என் ஆசைகள் நிறைவேறும் அந்த நாட்களுக்காக ஆசையாய் எதிர்நோக்கும் உன்னவள் நான்.