காதல் என்னுள்
காதல் என்னுள்...
கண் இமைக்கும் நேரத்தில் காதல் வந்தது
காரணம் தான் என்ன
தெரியவில்லை
விடை எழுத முடியாத வினா
இதுவரை கண்டுபிடிக்க முடியாத புதிர்
பொல்லாத காதல் புகுந்தவுடன்
காற்றிலே பறக்கிறேன்
தண்ணீரில் மிதக்கிறேன்
நிலவை ரசிக்கிறேன்
தென்றலை அனைக்கிறேன்
அவள் நினைவுகளில் ஏங்குகிறேன்
ஆனந்த வெள்ளத்தில் நீந்துகிறேன்.
காதலே நீ என்னுள் நிழைந்தாய்
என்ன மாயம் செய்தாய்
என்னுள் எவ்வளவு மாற்றம்
பசி பறந்துவிட்டது
தூக்கம் மறந்துவிட்டது
பேச்சு குறைந்துவிட்டது
உடல் கரைந்துவிட்டது.
நெஞ்சம் எப்போதும் இனிக்கிறது
உள்ளம் உவகையுடன் ஊஞ்சல் கட்டி ஆடுகிறது
இதயம் இனிய சங்கிதமாய் துடிக்கிறது
உடல் முழுக்க புது ரத்தம் ஆனந்த பிராவாகமாய் கொப்பலிக்கிறது.
இந்த காதல் நோய்க்கு மருந்து தான் என்ன
இது காய்ச்சல் அல்ல
மருந்து சாப்பிட்டால் சரியாக
இது ஜலதோஷம் அல்ல
மூன்று நாட்களில் குணமாக
இது காலகாலமாக மானுட வாழ்வியலில் ஏற்படும் அற்புத உணர்வு
இது மனிதன் மனங்களில் இயற்கையாக ஏற்பட்ட மகோன்னத எண்ணம்
இது மானுடதின் உரிமை
இது ஆண், பெண் இருபாலருக்கும் ஏற்படும் சுகானுபவம்.
காதலை கடக்காதவர் யாருமே இல்லை
காதலை ஜெய்த்தவர் சிலர்
காதலில் தோற்றவர் பலர்
காதலில் வெற்றியும், தோல்வியும் அவரவர் விதியை பொருத்தது
ஆனால் உண்மை காதலுக்கு என்றுமே தோல்வி கிடையாது.
- பாலு.